Published:Updated:

மோடி விரும்பியதால் சந்திக்கிறேன்: விஜய் விளக்கம்

மோடி விரும்பியதால் சந்திக்கிறேன்:   விஜய் விளக்கம்
மோடி விரும்பியதால் சந்திக்கிறேன்: விஜய் விளக்கம்
மோடி விரும்பியதால் சந்திக்கிறேன்:   விஜய் விளக்கம்
மோடி விரும்பியதால் சந்திக்கிறேன்:   விஜய் விளக்கம்

கோவை: நாட்டின் மிகப்பெரிய தலைவரான நரேந்திர மோடி தன்னை சந்திக்க விரும்பினார் என்றும், அவரது விருப்பத்தை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன் என்றும் நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று,  சென்னை வந்த குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கு இன்று மீண்டும் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். விமானம் மூலம் பெங்களூரு வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி வருகிறார். கிருஷ்ணகிரி-பர்கூர் நெடுஞ்சாலை கந்திகுப்பம் அருகே மாலை 4 மணியளவில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசுகிறார்.

இதையடுத்து, சேலம் இரும்பாலை மைதானத்தில் மாலை 5.15 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் மோடியுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கலந்து கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்லும் அவர், பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து கொடிசியாவில் இரவு 7.15 மணிக்கு உரையாற்றுகிறார். இரவில் கோவையில் லீ மெரிடியன் ஓட்டலில் மோடி தங்குகிறார். அப்போது, நடிகர் விஜய்யை மோடி சந்திக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர்.

இதனிடையே சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய், "நாட்டின் மிகப்பெரிய தலைவரான நரேந்திர மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது விருப்பத்தை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன். முழுக்க முழுக்க இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்புக்கும் அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.