Published:Updated:

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ராபர்ட் வதேராவை பழிவாங்க மாட்டோம்: மோடி

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், நிலமோசடி புகாருக்கு உள்ளான ராபர்ட் வதேராவை பழிவாங்க மாட்டோம் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின்

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ராபர்ட் வதேராவை பழிவாங்க மாட்டோம்: மோடி

கணவருமான ராபர்ட் வதேரா மீது பல்வேறு நிலமோசடி புகார்கள் கூறப்பட்டன.

குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் வதேரா 3.5 ஏக்கர் நிலத்தை மோசடியாக கைப்பற்றி உள்ளதாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா, குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், வதேரா மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் காங்கிரஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், வதேரா சிறையில் அடைக்கப்படுவார் என்று ஜான்சி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் உமாபாரதி பேசியிருந்தார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வதேரா மீது பழிவாங்கும் நடவடிக்கை எதையும் எடுக்க மாட்டோம் என்றும், யாரையும் பழிவாங்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இருக்காது என்றும், தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையே பா.ஜனதா அரசு மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.