Published:Updated:

காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் நிலக்கரியை லாக்கரில் வைத்து பூட்ட நேரிடும்: மோடி கடும் தாக்கு!

காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் நிலக்கரியை லாக்கரில் வைத்து பூட்ட நேரிடும்:   மோடி கடும் தாக்கு!
காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் நிலக்கரியை லாக்கரில் வைத்து பூட்ட நேரிடும்: மோடி கடும் தாக்கு!

கிருஷ்ணகிரி: நிலக்கரித்துறை கோப்பு தொலைந்து விட்டதாக காங்கிரஸ் கூறுகிறது. தொலைந்தது கோப்பு அல்ல, இந்தியர்களின் வாழ்க்கை என்றும், மத்தியில் இனியும் காங்கிரஸ் அரசு தொடர்ந்தால் நிலக்கரியை லாக்கரில் வைத்து பூட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி உள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் நிலக்கரியை லாக்கரில் வைத்து பூட்ட நேரிடும்:   மோடி கடும் தாக்கு!

கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா? இல்லை. ஆனால், குஜராத்தில் 24 மணி நேமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல், குடிநீர் தட்டுப்பாடு நிலவிய குஜராத்தில் இப்போது தடையின்றி தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பரஸ்பரம் ஒருவரையொருவர் குறை சொல்லி வருகின்றன.

காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் நிலக்கரியை லாக்கரில் வைத்து பூட்ட நேரிடும்:   மோடி கடும் தாக்கு!

கடந்த தேர்தலில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என கூறிய அரசு அதை நிறைவேற்றவில்லை. செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு கணக்கு சொல்லியாக வேண்டும். நாடு முழுவதும் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், நிலக்கரி பற்றாக்குறைதான். ஆனால், நமது மத்திய அரசு நிலக்கரி துறை கோப்பு தொலைந்ததாக நீதிமன்றத்தில் கூறுகிறது. தொலைந்தது நிலக்கரித்துறை கோப்பு அல்ல. இந்தியர்களின் வாழ்க்கை.

இதே காங்கிரஸ் அரசு தொடர்ந்தால் நிலக்கரியை லாக்கரில் வைத்து பூட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மக்கள் பிரச்னைகளை தீர்க்கும்'' என்றார்.

சேலம் பிரசாரம்

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது முதலில் 'வணக்கம்' என தமிழ் கூறிய அவர், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் கூறுகையில், ''60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத சாதனையை 60 மாங்களில் பா.ஜ.க. அரசு செய்யும். 60 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் உள்ள காங்கிரஸ் உள்நாட்டு பிரச்னைகளை தீர்க்கவில்லை. அதேபோல், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டள்ள கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரவில்லை. தேசத்தை விற்பவர்களை விட டீ விற்றவரே சிறந்தவர் என மக்கள் முடிவு செய்து கொண்டனர்.

சுகாதாரத் துறையில் இந்தி6யா இன்னும் வளர்ச்சி பெற வேண்டியுள்ளது. 75வது சுதந்திர தினத்திற்குள் நாடு முழுவதும் தேவைப்படும் அடிப்படை வசதிகளான கழிப்பறைகள், குடிநீர், வீடு இல்லாதவர்களுக்கு வீடு போன்றவைகள் செய்து கொடுக்கப்படும். கைத்தொழிலை பாதுகாப்போம் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உறுதி தந்துள்ளோம்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயக் கடனை ரத்து செய்வதிலும் ஊல் நடந்துள்ளது'' என்றார்.