Published:Updated:

தலையங்கம் - புதுக் கட்சி... பெரும் பொறுப்பு!

தலையங்கம் - புதுக் கட்சி... பெரும் பொறுப்பு!

தலையங்கம் - புதுக் கட்சி... பெரும் பொறுப்பு!

தலையங்கம் - புதுக் கட்சி... பெரும் பொறுப்பு!

Published:Updated:
தலையங்கம் - புதுக் கட்சி... பெரும் பொறுப்பு!

ரசியல் என்றாலே ஊழலும் சுயநலமும்தானா என்று வெறுத்துப்போன மக்களுக்கு, ஆறுதலாக மலர்ந்திருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி. 'சாமானிய மனிதனின் கட்சி' என்று பொருள் இதற்கு.

 மதம், மொழி, மாநிலக் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும் நிலையில், ஒட்டுமொத்தத் தேசத்தின் கோரிக்கையான 'ஊழல் வதம்' இதன் பிரதான கொள்கை. அதற்காகவே நிச்சயம் வாழ்த்தி வரவேற்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேசமயம், 'தனிநபர்களுக்காகவோ, தேர்தலுக்காகவோ அல்ல... ஊழல் எதிர்ப்பு என்ற கொள்கைக்காகவே கட்சி' என்று ஒவ்வோர் அசைவிலும் நிரூபித்துக் காட்டும் மிகப் பெரிய பொறுப்பு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இருக்கிறது.  

வலிக்கும்போது மருந்திட்டுக்கொண்டு, வலி போன பிறகு நோயின் மூல காரணத்தையே மறந்துபோகும் தவறு இங்கும் நேர்வதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி நடந்துவிடாமல், கொண்ட கொள்கையில் இருந்து துளியும் வழுவாமல், நல்லவர்களுக்கு மட்டுமே இடம் அளித்து,

வழக்கமான அரசியல் பலவீனத்துக்கு இடம்கொடுப்பவர் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி வெளியேற்றி... எல்லா வகையிலும் நெஞ்சுரத்தோடு நடக்க வேண்டும் இந்தக் கட்சி.

அதோடு, அரசியலின் முக்கியமான சாபக்கேடான, 'யார் பெரியவன்?' என்ற மோதல்  வெடிப்பதற்கு எந்தத் தருணத்திலும் இடம் தரவே கூடாது. வாரிசுப் பாசம், பதவி வெறி, அதிகாரப் பசி, புகழ் போதை ஆகிய அரக்கர்களையும் ஊழல் அரக்கனுக்குச் சமமாகவே பாவித்து எதிர்க்கும் பக்குவம் இந்தக் கட்சியின் தலைவர்களுக்குத் தேவை.

இதற்கு மாறாக, இந்தக் கட்சியின் பயணத்தில் சறுக்கல் ஏற்பட்டால்... ஊழல் அரசியல்வாதிகள் கெக்கலித்துச் சிரிப்பார்கள். அந்த விகாரச் சிரிப்பு - 'ஆம் ஆத்மி'யை நம்பும் அத்தனை பேரின் முகத்திலும் கரிபூசும் சிரிப்பாக இருக்கும்.

பொறுப்பு புரிந்தால் சரி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism