ஆடம்பரம், ஆர்ப்பரிப்பு, போட்டி அரசியல், கூட்டணி அச்சாரம் எனக் கலவையாக நடந்து முடிந்தது, தமிழக சட்டமன்றத்தின் வைர விழாக் கொண்டாட்டம். ஜெயலலிதாவின் புகழ்பாடும் விழாவாகவே நடந்த இந்த நிகழ்ச்சி, அவரை தேசிய அரசியலில் முன்னிறுத்தவே நடத்தப்பட்டதா என்ற பட்டிமன்றமும் நடக்கிறது!

போட்டா போட்டி!

விழாவில் பங்கேற்க அத்தனை வி.ஐ.பி-களும் முட்டி மோதினர். உள்ளே நுழைந்த பலரும் ஸீட் பிடிக்க போட்டா போட்டியே நடத்தினர். அ.தி.மு.க. எம்.பி-களுக்கு மாடத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கே அமர்ந்தால் அம்மாவின் பார்வை படாது என்பதால், கீழே இடம் தேடினர். மாடத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பின்னால் அமர்ந்த மைத்ரேயன் எம்.பி, தனது ஸீட்டை கீழே மாற்றித் தரும்படி கேட்டுப் போராடித் தோற்றார். 'இங்கே எதுவுமே தெரியவில்லை. பேசாமல் வீட்டிலேயே டி.வி-யில் நிகழ்ச்சியைப் பார்த்திருப்பேன்'' என்று ஒரு எம்.பி. சலித்துக் கொண்டார். தம்பிதுரை எம்.பி., கீழ் தளத்தில் அமர்ந்து கொண்டார். அழைப்பிதழில் இருக்கை எண் அச்சிடப்பட்டு இருந்ததால், அந்த இருக்கைக்கு உரியவர், 'இது என் ஸீட்’ என்று எழுப்பினார். ஸீட் மாறி, மாறி கடைசி வரிசைக்குப் போனார் தம்பிதுரை. அங்கே அவரை யாருமே எழுப்பவில்லை. காரணம்... விழாவுக்கு ஆப்சென்ட் ஆன தி.மு.க. எம்.எல்.ஏ-களின் இடம் அது.

பி.ஹெச்.பாண்டியன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மேயர் சைதை துரைசாமி போன்றவர்கள் அமைச்சர்கள் வரிசைக்கு அருகில் இடம் பிடித்துக்கொண்டனர். தா.பாண்டியனுக்கு ஸ்பெஷல் மரியாதையாக, அமைச்சர்கள் வரிசையில் இடம். வைர விழா அறிவிப்பு வெளியிடப்பட்டபோது சபாநாயகராக இருந்தவர் ஜெயக்குமார். அவர் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனுக்குப் பின்வரிசையில் அமர்ந்திருந்தார்.

நீதிபதிகள், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் ஆளும்கட்சியின் பக்கம் அமர்ந்திருந்தனர். ரொம்ப நாள் கழித்து அவைக்கு வந்த காடுவெட்டி குருவை, அழைப்பிதழ் இல்லை என உள்ளேவிட மறுத்தனர். 'எம்.எல்.ஏ-வை அடையாளம் தெரியாதா?’ என்று சண்டை போட் டுத்தான் உள்ளே வந்தார்.

கேப்டன் வந்தாரய்யா?

உதட்டைக் கடித்து, நாக்கைத் துருத்தி... சட்டமன்றத்தில் கோபக் கனலை வீசிய பிறகு சட்டசபைக்கே வராமல் இருந்த விஜயகாந்த், திடீர் என என்ட்ரி ஆனது பலருக்கும் ஆச்சர்யம். ஆளும் கட்சிக்கோ எரிச்சல். சட்டமன்றம் தொடர்பான விழாக்கள் நடக்கும்போது சபாநாயகர், முதல்வர், அவை முன்னவர், எதிர்க் கட்சித் தலைவர், துணை சபாநாயகர், அரசுக் கொறடா ஆகியோர் மேடையில் அமர்த்தப்படுவது வழக்கம். வைர விழாவிலோ எதிர்க் கட்சித் தலைவரான விஜயகாந்த்துக்கு அந்த வாய்ப்புத் தரவில்லை. ஆனாலும், கொஞ்சமும் கவலைப்படாமல், மேடைக்குக் கீழே ஜெயலலிதாவுக்கு எதிர்திசையில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் விஜயகாந்த்.

கருணாநிதி வீட்டில் பிரணாப்!

வைரவிழாவை தி.மு.க. புறக்கணித்தாலும் விழாவுக்கு வந்த ஜனாதிபதியைத் தன் வீட்டுக்கே வரவழைத்து மீடியாவின் பார்வையைக் கவர்ந்தார் கருணாநிதி. டெல்லியில் இருந்து சென்னை ஏர்போர்ட்டுக்கு மாலை 4.05 மணிக்கு பிரணாப் வருவதாக நேரம் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முந்தைய தினம் திடீரெனப் பயணத் திட்டம் அதிரடியாக மாறியது. 50 நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது 3.15 மணிக்கே பிரணாப் சென்னை வந்தார். இந்த மாற்றம் கருணாநிதிக்காக செய்யப்பட்டதை ஆட்சியாளர்கள் ரசிக்கவில்லை. விமான நிலையத்தில் பிரணாபை கவர்னர் ரோசய்யாவும் முதல்வர் ஜெயலலிதாவும் வரவேற்ற பிறகு, சி.ஐ.டி. காலனி நோக்கிப் பறந்தார் பிரணாப். ரோசய்யாவும் ஜெயலலிதாவும் கோட்டையை நோக்கிக் கிளம்பினர்.

சட்டசபையைப் போலவே, கருணாநிதியின் வீட்டில் பிரணாப் வருகைக்காக அலங்கரித்து இருந்தனர். கருணாநிதி வீட்டில் பிரணாபுக்குத் தேனீர் விருந்தும் தயாராக இருந்தது. சரியாக 4 மணிக்கு கருணாநிதி வீட்டுக்கு வந்தார் பிரணாப். 15 நிமிடங்களில் சந்திப்பை முடித்து, சட்டமன்றத்தை நோக்கிக் கிளம்பினார் பிரணாப். ஜெயலலிதா கோட்டையில் பிரணாப் வருகைக்காக அரை மணி நேரம் காத்திருந்தார். கருணாநிதி சந்திப்பால்தான் இந்தக் காத்திருப்பு. 'ஜெயலலிதாவைக் காக்க வைத்தார் எங்கள் தலைவர் கலைஞர்’ எனப் புல்லரிக்கிறார்கள் சீனியர் தி.மு.க. தலைகள்.

குஜ்ராலுக்கு இரங்கல்...

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சட்டசபைக்குள் நுழைந்ததுமே, லாபியில் சின்ன டிஸ்கஷன் நடந்தது. பிரணாப் விமானத்தில் வந்த நேரத்தில்தான், முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இறந்த செய்தி வெளியானது. விழாவில் இரங்கல் தெரிவிப்பது தொடர்பாகத்தான் லாபியில் விவாதித்தார்களாம். குத்துவிளக்கு ஏற்றப்பட்டதும், சபாநாயகர் தனபால் வரவேற்புரை ஆற்றுவார் என அறிவிக்கப்பட்டது. அதற்குள், ஜெயலலிதாவிடம் பிரணாப் ஏதோ சொல்ல... உடனே மைக் முன் அவசரமாக வந்தார் ஜெயலலிதா. வரவேற்புரை ஆற்ற வந்த தனபால் பதறியபடியே ஒதுங்கினார். ஐ.கே.குஜ்ராலுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டார் ஜெயலலிதா. அதன் பிறகே விழா தொடங்கியது.

கருணாநிதி பெயரை மறந்த ரோசய்யா!

பிரணாப், ரோசய்யா, ஜெயலலிதா, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இக்பால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். ஐந்து முகம் கொண்ட அந்த விளக்கில் கடைசியாக யார் ஏற்றுவது என்ற குழப்பம் இருந்த நிலையில் மெழுகுவத்தியைத் தனபாலிடம் நீட்டினார் இக்பால். கையில் மெழுகுவத்தியோடு அவர் ஜெயலலிதாவைப் பார்த்துக் கும்பிடு போட்டு, அனுமதி பெற்றே விளக்கை ஏற்றினார்.

''ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய முன்னோடிகள் சட்டசபையில் பங்களித்து இருக்கிறார்கள்'' என்ற ரோசய்யா கருணாநிதியின் பெயரைச் சொல்ல ஏனோ மறந்து விட்டார். ''ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பு உணர்வால் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக மாறும்'' என்று, முதல்வரை மறக்காமல் புகழ்ந்தார் ரோசய்யா.

''சரித்திரப் புகழ்வாய்ந்த தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன'' என்று சொன்ன ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டமன்றம் என பெயர் மாறியதைக் குறிப்பிட்டபோது பெயர் சூட்டிய அண்ணாவைச் சொல்லவில்லை. இறுதியாகப் பேசிய பிரணாப் ''நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடையூறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக நாட்களுக்கு சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற வேண்டும்'' என்றவர், ''இந்த அவையில் மிகவும் மூத்த உறுப்பினர் கருணாநிதி'' என்று புகழ்ந்ததை ஜெயலலிதா ரசிக்கவில்லை. கருணாநிதியோடு ஜெய லலிதாவையும் பாராட்டத் தவறவில்லை பிரணாப். ஜெயலலிதாவுக்கு ஒன்று, மற்றவர்கள் பேசுவதற்கு ஒன்று என மேடையில் இரண்டு போடியம் வைத்திருந்தனர். ஜெயலலிதாவுக்கான போடியத்தில் அவர் மட்டுமே பேசினார்.

பெங்காலிக்காரருக்கு பெங்காலி ஸ்வீட்!

விழாவுக்குப் பிறகு, தேனீர் விருந்து. பிரணாப், ரோசய்யா, ஜெயலலிதா மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்குத் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர். பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டு இருந்தது. பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெங்காலி ஸ்வீட்டையும் மெனுவில் சேர்த்திருந்தனர்.

எல்லாம் ஜெ. மயம்!

விழா முழுவதுமே ஜெயலலிதாமயம்தான். விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் செய்தியை சபாநாயகர் அறிவிப்பதுதான் மரபு. ஆனால், 110 விதியின் கீழ் இதை ஜெயலலிதாதான் அறிவித்தார். வைர விழா நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழாவை பிரணாப் கலந்துகொள்ளும் விழாவில் சேர்க்காமல், ஒரு மாதத்துக்கு முன்பே ஜெயலலிதா நடத்தி முடித்தார். சட்டமன்றப் புகைப்படக் கண்காட்சியிலும் திரும்பிய பக்கம் எல்லாம் ஜெயலலிதா படங்கள்தான். விழாவுக்கான அழைப்பிதழிலும் ஜனாதிபதி, கவர்னர் படங்கள் மிஸ்ஸிங், ஜெயலலிதாதான் சிரித்துக்கொண்டு இருந்தார். விழாவின்போது கோட்டையிலும் ஜெயலலிதாவின் படங்கள்மட்டும்தான். விழா மலரின் அட்டையிலும் ஜெ.தான்!

கூட்டணி அச்சாரமா?

ஜனாதிபதி தேர்தலில் பிரணாபுக்கு எதிராக ஓட்டுப் போட்ட பிறகு, சரியாக135-வது நாளில் அவரையே அழைத்து ஜெயலலிதா விழா எடுப்பதற்குக் காரணம் என்ன? பிரணாபுக்கு, ஜெயலலிதா சிவப்புக் கம்பளம் விரிக்க இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. 1996-ம் ஆண்டில் இருந்து, இடையில் 13 மாதங்கள் தவிர, இன்று வரை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க-வின் ஆதிக்கத்தை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உடைக்க நினைக்கிறார் ஜெயலலிதா. பிரணாப் முகர்ஜியை அழைத்து விழா எடுத்து, அவர் மூலம் காங்கிரஸை நெருங்கலாம் என்பது அ.தி.மு.க-வின் திட்டம். கருணாநிதிக்கு நெருக்கமானவர் பிரணாப். அந்த நெருக்கத்தையும் உடைக்க வேண்டும். அதோடு காங்கிரஸோடு நெருங்க எங்களாலும் முடியும் என்பதை தி.மு.க-வுக்குக் காட்ட வேண்டும்.

இன்னொரு காரணம்... எப்படியாவது பிரதமர் நாற்காலியைப் பிடிப்பது. 'தேர்தலில் வெற்றிபெற்று கணிசமான எம்.பி-க்கள் கிடைத்து விட்டால், பிரதமர் பதவிக்கு அம்மா வருவார். அப்போது, அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப் போகிறவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான். பிரதமர் ஆவதற்குப் போட்டி ஏற்பட்டாலும், பிரணாப் உதவுவார்’ என்று கணக்குப் போடுகிறார். அதனால்தான் பிரணாபுக்கு இவ்வளவு மரியாதையாம்!

- எம். பரக்கத் அலி, படங்கள்: சு.குமரேசன்