தர்மபுரியில் பற்றிய சாதி நெருப்பு தமிழக அரசியல் களத் தைத் தடம் புரட்டி தகிக்க வைத்து உள்ளது.

கடந்த 2-ம் தேதி எழும்பூரில், தலித் அல்லாத 42 சாதி அமைப்புகளை அழைத்து ஆலோசனை நடத்தினார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ''தமிழகத்தில் காதல் திருமணம் என்ற பெயரில் நாடகமாடி, பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு கணக்கு சொல்கிறேன். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 955 காதல் திருமணங்கள் நடந்து, அதில் 712 தோல்வியில் முடிந்துள்ளன. தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணங்களால் ஆயிரக்கணக்கான இளம்பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தலித்களில் சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அந்தச் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவரச் சொல்லி ஜனவரி 4-ம் தேதி அனைத்து சமுதாயங்களின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவோம்'' என்று அதிரடி கிளப்பினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ராஜா அம்மையப்பன், ''தலித்களில் சிலர் ஆதிக்கச் சாதி வீட்டில் திருமணம் செய்துகொண்டு அரசின் சலுகைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கும் சலுகையை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். அறியாத வயதுப் பெண்களை சில தலித் இளைஞர்கள் காதல் ஆசைகாட்டி ஏமாற்றித் திருமணம் செய்கிறார்கள். அதனால், பெண்களின் திருமண வயதையும் 21 என்று உயர்த்த வேண்டும். அதையும் மீறி திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குச் சொத்தில் உரிமை கொடுக்கக் கூடாது'' என்று ஆவேசம் காட்டினார்.

இந்தக்கூட்டம் முடிந்த மறுநாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே, தர்மபுரி சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

முதலில் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ''பெரியார், கலப்புத் திருமணம் என்ற வார்த்தையைக்கூட எதிர்த்தவர். 'மனுஷனுக்கும் மாட்டுக்குமா கல்யாணம் நடத்துறீங்க? மனுஷனுக்கும் மனுஷனுக்கும் நடக்குற திருமணத்தை எதுக்குக் கலப்புத் திருமணம்னு சொல்றீங்க? சாதி மறுப்புத் திருமணம்னு சொல்லுங்க’ என்பார். அப்படிப்பட்ட தலைவரின் பெயரைச் சொல்லக்கூட ராமதாஸுக்கு இனி தகுதி இல்லை'' என்று, நிதானமாகப் பேசி னார்.

அடுத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் மைக் பிடித்தார். ''தர்மபுரியில் வைக்கப்பட்ட தீ, வீடுகள் மீது வைக்கப்பட்டது அல்ல. 80 ஆண்டு காலச் சமூகச் சீர்திருத்த வரலாற்றின் மீது வைக்கப்பட்டது. தர்மபுரி விவகாரத்தில் தக்க தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால், தமிழகம் முழுவதும் ரவுடிகளின் ஆட்சிதான் நடக்கும். தமிழக அரசு உடனடியாக இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்'' என்று எச்சரித்தார்.

''சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்ப்பது என்பது இந்திய அரசியல் சட்டத்தை எதிர்ப்பதற்கு ஒப்பானது. தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேர்தலை மனதில் வைத்து சில சக்திகள் ஒன்றி ணைந்து நடத்தும் அரசியல் நாடகம் இது. அத்தகைய சக்திகளைப் புறமுதுகு காட்டும்படி துரத்துங்கள்'' என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன்.

கூட்டத்தின் நிறைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் சூடாக ஆரம்பித்தார். ''வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். நாங்களும் அதைத்தான் கேட்கிறோம். அந்தச் சட்டம் கடிக்காத பாம்புபோல இருக்கிறது. அதை மேலும் வலுவுள்ள சட்டமாகத் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று வேடிக்கை காட்டுகிறார் மருத்துவர் ராமதாஸ். தலித்களுக்கு எதிராகப் பெரும்பான்மை ஆதிக்கச் சாதியினரைத் தூண்டிவிடுவதும், சாதிய சக்திகளை ஒருங்கி ணைப்பதையும் அனுமதிக்க முடியாது. அடங்க மறு... அத்துமீறு... திமிறி எழு... திருப்பி அடி என்பது குறிப்பிட்ட சாதியின் வார்த்தைகள் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வார்த்தை. பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற ரீதியில் டாக்டர் ராமதாஸ் இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றால், அதை எதிர்க்கும் முதல் ஆளாகக் களத்தில் இருப்பான் இந்த திருமாவளவன். உங்கள் சாதி இளைஞர்கள் உங்கள் பிள்ளைகளை ஏமாற்றவில்லையா? திருமணம் செய்த பிறகு கைவிடவில்லையா? இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லாமல் நாங்கள் ஓயப்போவது இல்லை'' என்று சூடாக முடித்தார்.

முதலில், சாதி வெறிக்குத் தீ வைங்கப்பா!

- தி.கோபிவிஜய்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்