ஜில்லென்று மழையில் நனைந்து வந்து சிறகுகளைச் சிலுப்பிக்கொண்டு அமர்ந்தார் கழுகார்.

சட்டசபை வைர விழா மேட்டரை வாங்கி வாசித்தவர் முகத்தில் சின்னப் புன்னகை. ''ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தனது வீட்டுக்கு வரவழைத்ததன் மூலம் பெரிய சாதனையைச் செய்து விட்டதாக நினைக்கிறார் கருணாநிதி. தனக்கான மரியாதை மீண்டும் டெல்லியில் கிடைத்திருப்பதாகவும் நினைக்கிறார். ஆனால், ஜனாதிபதி தனது வீட்டுக்குள் நுழைவது வரை படபடப்புடன் இருந்துள்ளார். விமான நிலையத்தில் வரவேற்கும் ஜெயலலிதா ஏதாவது சொல்லி, டிஸ்டர்ப் செய்துவிடக் கூடாது என்பதுதான் அவரது பதற்றத்துக்குக் காரணம்!''

''டெல்லியில் முடிவான புரோகிராம் என்பதால், மாற்ற முடியாதே?''

''ஆனாலும் தயக்கம் இருந்தது. ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜியை நிறுத்த வேண்டும் என்று கருணாநிதி கூறியதை அடுத்து, சென்னை சி.ஐ.டி. நகர் இல்லத்துக்கு வந்து கருணாநிதியிடம் ஆசி வாங்கியே தனது தேர்தல் பிரசாரத்தை பிரணாப் முகர்ஜி தொடங்கினார். தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆன பிறகு, பிரணாப் முகர்ஜி முதன் முதலாக சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்தபோது அவர், கருணாநிதியைச் சந்திக்கவில்லை. அதனால்தான் தயக்கம். இந்த விழாவுக்கு பிரணாப் வருவதைத் தொடர்ந்து தன்னுடைய கவலை கலந்த வருத்தங்களை காங்கிரஸ் மேலிடத்துக்கு கருணாநிதி சொல்லி அனுப்பினார். கருணாநிதியைச் சமாதானப்படுத்த நினைத்த காங்கிரஸ் மேலிடம், இந்தத் தகவலை பிரணாப் முகர்ஜிக்கும் அனுப்பியது.

அதனால்தான், சட்டப்பேரவை வைர விழாவில் கலந்துகொள்ள வந்தவர், விமான நிலையத்தில் இருந்து நேராக சி.ஐ.டி. காலனிக்கு வந்தார். அவரை வரவேற்க வீட்டுவாசலில் வாழை மரம், மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வீட்டு வாசலில் நின்று அன்பழகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். வீட்டுக்குள் சென்ற பிரணாப் முகர்ஜி, கருணாநிதிக்கு சால்வை அணிவித்தார். கருணாநிதி அவருக்கு மாலை அணிவித்தார். இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அடையாறு கேட் ஓட்டலில் இருந்து டிஃபன் வந்தது. ஆனால், அதை பிரணாப் சாப்பிடவில்லை. கிரீன் டீ மட்டும் கொஞ்சம் குடித்தார். கருணாநிதிக்காக ஒரு புத்தகமும் இந்துஸ்தானி இசை கேசட்டும் பிரணாப் கொண்டுவந்து கொடுத் தாராம். இது, வழக்கமான நலம் விசாரிப்பாக மட் டும்தான் இருந்துள்ளது. 'உங்களது தலைமையில் கட்சி சிறப்பாக தொடர்ந்து செயல்பட வேண்டும். அதற் கான ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் உங்களுக்கு உண்டு’ என்றாராம் பிரணாப். இவர் சொன்னது கருணாநிதிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதாம்!''

''நாட்டின் ஜனாதிபதி வீட்டுக்கு வந்தால் சந்தோஷம் பொங்கத்தானே செய்யும்?''

''அன்று காலையில், 'கருணாநிதி அறிவாலயத்திலும் இல்லை, கோபாலபுரத்திலும் இல்லை, சி.ஐ.டி. காலனி வீட்டிலும் இல்லை’ என்று ஒரு வதந்தி கிளம்பியது. அடுத்து, 'கருணாநிதியை வீட்டில் சந்திக்க வாய்ப்பு இல்லை என்று பிரணாப் சொல்லி விட்டார்’ என்று செய்தி பரவியது. இரண்டையும் போலீஸார்தான் கிளப்பியதாக தி.மு.க. தரப்பு சொல்கிறது. ஆனால் காலையில் மகாபலிபுரம் பக்கம் சிறு பயணம் போனார் என்று போலீஸ் தரப்பு சொல்கிறது. இந்தச் செய்தி பரவிய ஒரு மணி நேரத்தில் சி.ஐ.டி. காலனி வீட்டில் கருணாநிதியின் கார் இருந்தது.''

''சட்டசபை விழாவுக்கு அவர் ஏன் போக வில்லையாம்?''

'' 'முறையாக அழைக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் சார்புச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவரிடம்தான் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கருணாநிதி எதிர்பார்த்தாராம். அதனால்தான் போகவில்லையாம்!''

''ஆனால், விஜயகாந்த் போயிருக்கிறாரே?''

''காங்கிரஸுடன் நல்லெண்ணம் பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறாராம் விஜயகாந்த். அதனால்தான் விழாவில் கலந்து கொண்டாராம்.''

''தன்னுடைய பெயரை கவர்னர் ரோசய்யா சொல்லவில்லை என்று புகார் சொல்லி இருக்கிறாரே கருணாநிதி?''

''கவர்னரின் செயல்பாடுகள் சம்பந்தமாக ப.சிதம்பரத்திடம் கருணாநிதி வாசித்த புகாரை ஏற்கெனவே நான் உமக்குச் சொல்லி இருக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் கவர்னரின் இந்தப் புறக்கணிப்பாம்'' என்ற கழுகார் அடுத்து சப்ஜெக்ட் மாறினார்!

''மத்திய உளவுத் துறையின் (ஐ.பி.) தலைவர் பதவிக்கு சையது ஆஷிப் இப்ராஹிம் நியமிக்கப்பட்டு இருக்கிறார். உள்நாட்டு உளவு வேலைகளைக் கவனித்து, ஆளும் மத்திய அரசுக்குத் தருவதுதான் ஐ.பி-யின் வேலை. பக்கா காங்கிரஸ் அனுதாபியாக இருந்தால் மட்டுமே, இந்தப் பதவிக்கு வர முடியும். அந்த வகையில்தான், இவரைத் தேர்வுசெய்து உள்ளார்களாம். முதன் முதலாக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரேஸில் சிலர் இருந்தாலும், பிரதமர் தலைமையிலான கமிட்டி இவரைத்தான் ஓகே செய்து உள்ளது. 1977 வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். மத்தியப் பிரதேச மாநில கேடர் ஆபீஸர். காந்தகார் விமானக் கடத்தல் சம்பவம் நடந்தபோது, இந்திய அரசு சார்பில் முக்கியப் பங்கு வகித்தவர். தீவிரவாதத்துக்கு எதிரான சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தவர். குறிப்பாக, சைபர் ஆபரேஷன் மற்றும் செக்யூரிட்டியில் கில்லாடி என்கிறார்கள். மாதவராய் சிந்தியா, முப்தி முகமது சையது ஆகியோர் மத்திய மந்திரிகளாக இருந்தபோது, அவர்களிடம் தனிச்செயலராகப் பணியாற்றியவர்.’'

''இந்திய அரசின் வெளிநாட்டு உளவுப் பிரிவான 'ரா'வுக்கும் புதியவரை நியமித்து இருக்கிறார்களே?''

''அவர் பெயர் அலோக் ஜோஷி. இந்தியாவுக்கு வெளியில் இருந்து உளவுத் தகவல்களை சேகரிப்பதில் அனுபவம் வாய்ந்தவராம். 1976-ம் வருட ஐ.பி.எஸ். பேட்ஜ். ஹரியானா மாநில கேடர் ஆபீஸர். நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்பான சில ஸ்பெஷல் ஆபரேஷன்களில் முக்கியப் பங்கு வகித்தவர். இவரது சர்வீஸை சீர்தூக்கிப் பார்த்துத்தான் பதவி தந்திருக்கிறார்கள் என்கிறது டெல்லி ஐ.பி.எஸ். வட்டாரம்.''

''இந்த இருவர் சரி. சி.பி.ஐ-யின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டு இருப்பவர் குறித்து டெல்லியில் எதிர்க் கட்சிகள் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனவே? இங்கும் வழக்கு போட்டுள்ளார்களே?''

''ரஞ்சித் சின்ஹாதான் சி.பி.ஐ-யின் புதிய இயக்குனர். 1974-ம் வருட ஐ.பி.எஸ். பேட்ச். பீகார் மாநில கேடர் ஆபீஸர். இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு போலீஸில் டி.ஜி.பி-யாக இருந்தார். இவர் பெயரை மத்திய அரசு அறிவித்ததுமே, ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பி விட்டன''

''மூன்று முக்கியமான பதவிகளுக்கும் புதியவர்களை நியமித்து இருப்பதால், டெல்லி அளவில் சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி இருக்குமே?''

''இந்த மும்மூர்த்திகளின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்குமாம். அதேநேரம், ரேஸில் இருந்த வேறு சில முக்கிய அதிகாரிகளை சமாதானப்படுத்தும் வகையில், டெல்லி ஐ.பி.எஸ். லெவலில் மாறுதல்கள் மற்றும் புதிய பதவிகளை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தோ - திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படையின் இயக்குனர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குனர் போன்ற

பதவிகளைப் பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடுத்த கட்ட முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.''

''அதுசரி, நம்ம ஊரில் டி.ஜி.பி-யின் பதவி நீட்டிப்பு விவகாரம் என்ன ஆனது?''

''மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. ராமானுஜத்தின் இரண்டு ஆண்டு பணி நீட்டிப்புக்கு முறையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது. ஆக, இனி அவர் பதவியில் நீடிப்பார். சக அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.''

''ஓ... அப்படியா!''

''அ.தி.மு.க. சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா, டிசம்பர் 10-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு, கீழ்ப்பாக்கத்தில் ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் விழா நடந்தது. அந்த இடம் போதுமானதாக இல்லை என் பதால், இந்த ஆண்டு இடத்தை மாற்றிவிட்டனர். கடந்த ஆண்டு, நடந்த விழாவில்தான் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கு 500 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அந்த நிதிஉதவியை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு, போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா வெளியேறிய பிறகு நடந்த முதல் கூட்டம் அந்த கிறிஸ்துமஸ் விழாதான். அதில்தான் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் காரசாரமாகப் பேசினார். 'அ.தி.மு.க-வில் அம்மாதான் எல்லாம். மற்றவர்கள் எல்லாம் சும்மா’ என்றார். அதே வேகத்தில் டிசம்பர் 30-ம் தேதி நடந்த பொதுக்குழுவிலும் பி.ஹெச்.பாண்டியன் விளாசினார். ஆனால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேச முடியுமா என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் ஓரங்கட்டப்பட்டு விட்டாராம்.''

''இந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு சசிகலாவை அழைத்துச் செல்வாரா ஜெ.?''

''பொதுவாக, இப்போது எந்த விழாக்களுக்கும் சசிகலாவை அழைத்துச்செல்வது இல்லை. பூங் குன்றனின் தம்பி திருமண போட்டோவில் சுடிதார் அணிந்த சசிகலா படத்தை பத்திரிகைகளுக்குக் கொடுக்க அனுமதித்தார் ஜெயலலிதா. அது வெளிவந்த பிறகுதான் தவிர்த்திருக்கலாமே என்று நினைத்தாராம்!'' என்றபடி எஸ்கேப் ஆனார் கழுகார்!

அட்டை மற்றும் படங்கள்:

எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சாய் தர்மராஜ்

ஏமாந்த சிறுத்தைகள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 50-வது பிறந்த நாளையட்டி அவருக்குத் தங்கம் வழங்கும் விழா மாவட்டம்தோறும் நடந்து வருகிறது. திருச்சி மாவட்ட நிர்வாகம் 100 பவுனுக்குக் குறையாமல் தங்கம் வழங்கிக் கௌரவிக்க திட்டமிட்டு இருந்தது. அதற்காக அவர்கள் பெரிதும் நம்பி இருந்தது தி.மு.க-வினரைத்தானாம். முன்னாள் சீனியர் அமைச்சர் ஒருவர் 10 பவுனும், அவருக்குப் போட்டியான முன்னாள் அமைச்சர் ஒருவர் ஐந்து பவுனும் தி.மு.க. ஆதரவுத் தொழில் அதிபர் ஒருவர் ஐந்து பவுனும் தருவதாக வாக்குறுதி கொடுத்து இருந்தார்களாம். ஆனால், கடைசி வரை சிறுத்தைகளை அலைக்கழித்து ஒருவர் 50 ஆயிரம் ரூபாயும், மற்றவர் 10 ஆயிரமும் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார்களாம். 'இப்போது நிலைமை சரியில்லை’ என்று கூறி தொழில் அதிபர் கழன்று கொண்டாராம்.

'தேர்தல் வரட்டும், பார்த்துக்கலாம்’ எனக் கடுப்பில் இருக்கின்றனர் சிறுத்தைகள்!

'தொழில் வளம் பெறவும் மக்கள் நலம் சிறக்கவும் ராகுல் காந்தியை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டுகிறோம்’ - இப்படி புறப்பட்டிருக்கும் போஸ்டர் புயலால் பரபரத்துக்கிடக்கிறது மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் சிவகங்கைத் தொகுதி!

அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் பலம், பலவீனங்களை நாடிபிடித்துப் பார்த்து வருகிறது ராகுல் காந்தி அனுப்பிவைத்த மேலிடப் பார்வை யாளர்கள் குழு. தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, கட்சியின் செயல்பாடு, மக்களைச் சென்று அடைந்திருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மதிப்பீடு, யாருக்கு வாய்ப்பு அளித்தால் தொகுதியைக் கைப்பற்ற முடியும், வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தால் நடப்பு எம்.பி-யின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்துக் கருத்துக் கேட்கும் இந்தக் குழு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் விருப்ப மனுக்களையும் வாங்குகிறது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் ஒன்பது தொகுதிகள், அந்தமான் நிக்கோபர் தொகுதிக்கும் பார்வையாளராக நியமிக்கப்படுள்ள ஆந்திர மேலவை உறுப்பினரும் காங்கிரஸ் கொறடாவுமான ருத்ரராஜு பத்மராஜு, சிவகங்கைக்கு வந்தார். அப்போதுதான் ராகுலுக்கு ஆதரவாக போஸ்டர்கள் அடித்து, சிதம்பரம் வட்டாரத்தைச் சீண்டி இருக்கிறார்கள்.

இந்தப் பரபரப்பின் பிதாமகன்களான நாடாளுமன்றத் தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சார்லஸ் ஜான் கென்னடி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சக்திவேல் இருவரையும் சந்தித்தோம். ''ராகுல்ஜி அமேதி தொகுதியில் வெற்றிபெற்று, தொகுதியை எவ்வளவோ டெவலப் செய்திருக்கார். அதுபோன்ற பயனை சிவகங்கை தொகுதியும் அடையவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. ராகுல்ஜி சிவகங்கை எம்.பி-யானால், அடிக்கடி நம் தொகுதிக்கு வருவார். அதனால் தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதுத் தெம்பு கிடைக்கும். செல்வாக்குள்ள இளம் தலைவர்கள் உருவாவார்கள். இதுதான் எங்களது தொலைநோக்குச் சிந்தனை. எங்களுடைய விருப்பத்தை போஸ்டராக ஒட்டி, மேலிடப் பார்வையாளரிடம் மனுவும் கொடுத்தோம். 'ராகுல்ஜியிடம் கட்டாயம் தெரிவிக்கிறேன். நீங்களும் டெல்லிக்கு வந்து உங்களது விருப்பத்தை அவரிடம் நேரடியாகத் தெரிவியுங்கள்’ என்று சொன்னார்.

சிதம்பரத்தைச் சீண்டுவது எங்கள் நோக்கம் இல்லை. இப்போது வி.ஐ.பி. தொகுதியாக இருப்பதை

வி.வி.ஐ.பி. தொகுதியாக மாற்றவேண்டும் என்பதே எங்கள் ஆசை. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், நாங்கள் ஒட்டிய போஸ்டர்களை ஆள் வைத்துக் கிழித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தையும் ராகுல்ஜியிடம் தெரிவிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் மேலிடப் பார்வையாளர்'' என்றார்கள்.

சிவகங்கை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், ''மலிவான அரசியல் விளம்பரத்துக்காக போஸ்டர் ஒட்டி இருக்காங்க. போஸ்டர் ஒட்டியும் மனு கொடுத்தும்தான் ராகுல் காந்திக்கு ஸீட் கேட்கணுமா? இந்தியாவில் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் ராகுல்ஜி போட்டியிடலாம்; அதை யாராலும் தடுக்க முடியாது. அவரே விரும்பி சிவகங்கைக்கு வந்தால், காங்கிரஸ் கட்சி அதை வரவேற்கும்'' என்றார்.

'இதெல்லாம் சிதம்பரத்தைச் சீண்டுவதற்கான ஸ்டன்ட் மட்டும்தான். பிரதமருக்கு அடுத்த இடத்தில் செல்வாக்காக இருக்கும் ஒருவரை உதாசீனம் செய்ய காங்கிரஸ் மேலிடம் விரும்பாது. இந்த முறையும் இங்கு சிதம்பரம்தான் போட்டியிடுவார். அல்லது கார்த்தி சிதம்பரத்தை நிறுத்துவார்கள். மற்றபடி தமிழ்நாட்டுக்கு வந்து போட்டியிடும் அளவுக்கு ராகுல் ரிஸ்க் எடுக்க மாட்டார்’ என்று சொல்லப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் எத்தனையோ மாதங்கள் இருக்கின்றன. அதுவரை இதெல்லாம் என்டர்டெயின்மென்ட்!

- குள.சண்முகசுந்தரம்,

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

திருச்சி ராசியான இடமா?

ஒவ்வொரு எம்.பி. தொகுதியிலும் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி, மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. தி.மு.க-வும் அதே பாணியில், ஆனால் அதைவிட பிரமாண்டமான வகையில் மக்களவைத் தொகுதி தோறும் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தப்போகிறது. முதல் கூட்டத்தை சென்டிமென்டாக திருச்சியில் தொடங்க இருக்கிறார்கள். அனைத்து ஊர்களிலும் மு.க.ஸ்டாலின்தான் பிரதானமாக இருப்பார். இந்தக்கூட்டம் டிசம்பர் 15 அன்று காலையில் திருச்சி, காஜாமலை பகுதியில் ஒரு தனியார் இடத்தில் பந்தல் அமைத்து மினி மாநாடுபோல் நடக்க இருக்கிறதாம். 'கடந்த சட்டமன்றத் தேர்தல் ஆயத்தக் கூட்டத்தை கோவையில் தொடங்கினோம். கழகம் வெற்றி பெறவில்லை. திருச்சியில் கழகம் தொடங்கும் தேர்தல் ஆயத்த ஏற்பாடுகள் பெரும்பாலும் வெற்றியைத் தந்துள்ளன. அதனால், மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகளையும் திருச்சியில் இருந்து தொடங்க கட்சி மேலிடம் முடிவு செய்து உள்ளது’ என்றார் தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர். சென்டிமென்ட் ஒர்க்-அவுட் ஆகுமா?