Published:Updated:

கூடாதய்யா கூடாது!

கூடாதய்யா கூடாது!

கூடாதய்யா கூடாது!

கூடாதய்யா கூடாது!

Published:Updated:

'மேற்கே சூரியன் உதித்தாலும் இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்’, 'வானமும் பூமியும் இருக்கும் வரை, கடலில் நீர் இருக்கும் வரை இனிமேல் கூட்டணி கிடையாது’ என

கூடாதய்யா கூடாது!

ராமதாஸ் திரும்பத் திரும்பக் கூறிவந்தாலும், யாரும் நம்புவது மாதிரி இல்லை. ராமதாஸ் வேறு என்ன சொன்னால் மக்கள் நம்புவார்கள்? சில ஐடியாக்கள்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடாதய்யா கூடாது!

தி.மு.க. நடத்துகிற டெசோ மாநாடுகளினால் ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்தாலும்கூட, இனிமேல் தி.மு.க-வுடன் கூட்டணி கிடையாது!

கூடாதய்யா கூடாது!

ராகுல்காந்தி பொறுப்பேற்ற ஏதாவது ஒரு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால்கூட, நாங்கள் இனிமேல் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம்!

கூடாதய்யா கூடாது!

நாராயணசாமி வாரத்துக்கு ஏழு நாட்கள் மௌன விரதம் கடைப்பிடித்தால்கூட, கூட்டணி வைக்க மாட்டோம்!

கூடாதய்யா கூடாது!

பொதுக் கூட்டங்களில் எல்லோருக்கும் புரிகிற மாதிரி தெளிவாக, கோர்வையாக விஜயகாந்த் பேச ஆரம்பித்தாலும்கூட, இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது!

கூடாதய்யா கூடாது!

காடுவெட்டி குரு வன்முறையைக் கைவிட்டு சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்தாலும்கூட, கூட்டணி கிடையாது!

கூடாதய்யா கூடாது!

எங்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குச் செவிசாய்த்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தினால்கூட, நாங்கள் இனிமேல் கூட்டணி வைக்க மாட்டோம்!

கூடாதய்யா கூடாது!

முந்தையத் தேர்தல்களின்போது நாங்கள் மாறிமாறி அமைத்த கூட்டணி பற்றிய முழு விவரம் அறிந்தவர்களில் யாராவது ஒரே ஒருவர், நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற எங்கள் விளக்கத்தை நம்பினார்கள் என்பதை நிரூபித்தால்கூட, நாங்கள் இனிமேல் கூட்டணி வைக்க மாட்டோம்!

கூடாதய்யா கூடாது!

இறுதியாக, எந்தக் கட்சி 'சட்டமன்றத் தேர்தலில் வென்றால், அன்புமணிதான் தமிழக முதல்வர்’ என்ற எங்கள் அதிகபட்சக் கோரிக்கை, அல்லது 'அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்’ என்ற குறைந்தபட்சக் கோரிக்கை, இரண்டில் ஏதாவது ஒன்றை ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்களுடனே கூட்டணி என்பதை முத்தாய்ப்பாகச் சொல்லி  முடிக்கிறேன். நன்றி, வணக்கம்!

-சீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism