Published:Updated:

''அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இல்லை. அடிமைகள்தான் இருக்கிறார்கள்!''

''அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இல்லை. அடிமைகள்தான் இருக்கிறார்கள்!''

''அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இல்லை. அடிமைகள்தான் இருக்கிறார்கள்!''

''அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இல்லை. அடிமைகள்தான் இருக்கிறார்கள்!''

Published:Updated:

மாயத்தேவர் - எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க-வை ஆரம்பித்த புதிதில் தமிழகம் முழுவதும் அறிந்த பெயர். முதன்முதலாக அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, 'அ.தி.மு.க-வின் முதல் வெற்றி வேட்பாளர்’ என்று தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பிடித்தவர். முதன்முறையாகத் திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதாலேயே ஆட்சிக்கு வந்த பிறகு, திண்டுக்கல்லை மதுரையில் இருந்து பிரித்துத் தனி மாவட்டம் ஆக்கி, அதற்கு 'அண்ணா மாவட்டம்’ என்று பெயரும் சூட்டினார் எம்.ஜி.ஆர். அந்த மாயத்தேவர் இப்போது என்ன செய்கிறார்?

''அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இல்லை. அடிமைகள்தான் இருக்கிறார்கள்!''

''இப்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை. அரசியல் எனக்குத் தேவையும் இல்லை'' என்றவர், அரசியல் நிலவரங் களைப் பேசத் தொடங்கினார். ''முதல் முறையாக தேர்தல்ல நின்னப்ப 16 சின்னங்களைக் காட்டி... 'இதுல ஒண்ணைத் தேர்ந்தெடுங்க’னு கலெக்டர் சொன்னாரு. நான் இரட்டை இலையைத் தேர்ந்தெடுத்தேன். பிறகு எம்.ஜி.ஆர். கிட்ட 'நமக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி இருக்காங்க’னு சொன்னேன். 'அதை ஏன்யா தேர்ந்தெடுத்தே?’னு எம்.ஜி.ஆர். கேட்டாரு. 'தலைவரே சுவத்துல இலையை ஈஸியா வரைஞ்சிடலாம். அதோட வின்சென்ட் சர்ச்சில் மாதிரி ரெண்டு விரலைக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அ.தி.மு.க-வில் தொண்டர்கள் இல்லை. அடிமைகள்தான் இருக்கிறார்கள்!''

காட்டியே ஜெயிச்சிடலாம். 'வி’ பார் விக்டரி நாமதான் தலைவரே ஜெயிக்குறோம்’னு சொன்னேன். 'சபாஷ்’னு சொல்லி அதே மாதிரி தேர்தல்ல ரெண்டு விரலைக் காட்டி வாக்குக் கேட்டாரு. மக்கள் ஓட்டைக் குத்திக் குவிச்சாங்க...''

''அதுசரி, இப்போதைய அ.தி.மு.க. பத்திச் சொல்லுங்க...''

''எம்.ஜி.ஆர்-கிட்ட ஏழை, எளிய மக்கள் சுலபமா நெருங்கிப் பழக முடியும். பக்கத்துல உக்காந்து போட்டோ எடுத்துக்க முடியும். ஆனா, இப்ப இருக்கிற தலைமை, தொண்டர்களை மதிக்கிற மாதிரித் தெரியலை. எம்.ஜி.ஆர் வேற... இந்த அம்மா காலம் வேற. இந்தா... இந்தா இப்படிக் கும்பிடுறாய்ங்கய்யா. (கும்பிட்டுக் காட்டுகிறார்) அ.தி.மு.க-வில் ஒரு காலத்துல தொண்டர்கள் இருந்தாங்க. இப்ப அடிமைகள்தான் இருக்காங்கனு நான் சொல்லலை, உலகமே சொல்லுது!''

''ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தீர்களா..?''

''நான் இதுவரைக்கும் முயற்சி செய்யலை. பார்க்க நினைக்கவும் இல்லை... பார்க்கப் போறதும் இல்லை. எம்.ஜி.ஆர். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் என் முகத்துல முழிச்சா ராசின்னு என் முகத்துலதான் முழிப்பார். இதுக்காகவே அன்னைக்குக் காலையில மொத ஆளா தோட்டத்துக்குப் போயிடுவேன். அதெல்லாம் அந்தக் காலம்!''

''நானும் எம்.ஜி.ஆர். வழியில நடக்கிறவன்னு சொல்றாரே விஜயகாந்த். அவரோட தே.மு.தி.க-வைப் பத்தி?''

''விஜயகாந்த் கட்சி உருப்படாது. அதான் எல்லா எம்.எல்.ஏ-வும் ஓடுறானே. யாரையும் அவர் மதிக்கிறது இல்லை. இருக்குறவனை எல்லாம் சினிமாவுல சண்டை போடுற மாதிரி நினைச்சுக்கிட்டுப் போட்டு அடிச்சா, அவனவன் அடி தாங்காம அலறி அடிச்சுக்கிட்டு ஓடுறான்!''

_ ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism