Published:Updated:

திருப்பதி கோவிலில் மோடி சாமி தரிசனம்!

திருப்பதி கோவிலில் மோடி சாமி தரிசனம்!
திருப்பதி கோவிலில் மோடி சாமி தரிசனம்!
திருப்பதி கோவிலில் மோடி சாமி தரிசனம்!

திருமலை: திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார்.

திருப்பதியில் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். அதன்பின் இரவு திருமலைக்கு சென்றவர், அங்குள்ள பத்மாவதி விடுதியில் தங்கினார். இன்று காலை 7.30 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தரிசனம் முடித்து விட்டு 8.30 மணிக்கு வெளியே வந்தார். பின்னர் அவர் மலையில் இருந்து கீழே இறங்கி காளஹஸ்திக்கு சென்றார். அங்கு, பரிகார பூஜையில் பங்கேற்றுவிட்டு சாமி தரிசனம் செய்தார்.

மோடி, திருப்பதி மலையில் இருந்து கீழே இறங்கும் போது மலை பாதையில் மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சுமார் 30 நிமிடத்துக்கு பின்னர் வாகனங்கள் மலைபாதையில் அனுமதிக்கப்பட்டன. அதேபோல், மோடி வருகையையொட்டி திருப்பதி காளஹஸ்தி கோவில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.