Published:Updated:

சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்!

விகடன் விமர்சனக்குழு
சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்!
சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்!
சென்ட்ரல் குண்டு வெடிப்பு: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்!

புதுடெல்லி: சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, ''இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பானவர்களின் கோழைத்தனத்தையே இது காட்டுகிறது.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்" என்றார்.

இதனிடையே தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு கமிஷ்னர் எஸ்.கே. மிட்டல் இந்த தாக்குதல் தொடர்பான விசாரணையை மேற்கொள்வார் என ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறியுள்ளார். இதேபோல், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கும்படி அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.