Published:Updated:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்: நரேந்திர மோடி அறிவிப்பு!

Vikatan Correspondent
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்: நரேந்திர மோடி அறிவிப்பு!
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்: நரேந்திர மோடி அறிவிப்பு!
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம்: நரேந்திர மோடி அறிவிப்பு!

ஹைதராபாத்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம் என்று தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி அறிவித்தார்.

பா.ஜ..க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ''டெல்லியில் தாய், மகனை கொண்டு அமைந்துள்ள காங்கிரஸ் அரசு வாய்ப்பு வந்தபோது, தெலுங்கு மக்களை அவமதித்துவிட்டது. அவர்கள் ஆந்திராவை பிரித்து சீமாந்திராவையும், தெலங்கானாவையும் உருவாக்கி விட்டார்கள். ஆனால், இரு தரப்பு மக்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

தெலுங்கானா மாநிலம் ஜூன் 2 ஆம் தேதி உருவாகும் என தாய், மகன் அரசு நாள் குறித்து விட்டது. இந்த நாள்தான் இத்தாலியும் உருவான நாள். தாய், மகன் அரசில் இந்தியா, ‘ஊழல் இந்தியா’ ஆகி விட்டது. இந்தியா இப்போது ஒரு திட்ட நாடாக உருவாக வேண்டும். அதில் செயல்படுத்துவதற்கான நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

சீமாந்திரா மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று ஊழல் ஆந்திரா. இன்னொன்று தங்கமான ஆந்திரா. இவ்விரண்டில்தான் உங்கள் தேர்வு அமைய வேண்டும். நானும் தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் வளர்ச்சிக்காக இங்கே ஒன்றுபட்டு நிற்கிறோம். நாடு முழுவதும் 100 சீரான நகரங்களை தேர்ந்தெடுக்க உள்ளோம். அதில் சீமாந்திராவுக்கு உரிய பங்கு உண்டு.

மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள நதிகளை இணைப்போம். அது ராயலசீமாவுக்கு பலன் தரும்" என்றார்