Published:Updated:

"முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்தவள்தான்....!"-சுவாதியின் பாட்டி கண்ணீர் பேட்டி

Vikatan Correspondent
 	"முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்தவள்தான்....!"-சுவாதியின் பாட்டி கண்ணீர் பேட்டி
"முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்தவள்தான்....!"-சுவாதியின் பாட்டி கண்ணீர் பேட்டி

குண்டூர்: முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஜனவரியில் பொங்கலுக்கு வீட்டிற்கு வந்த சுவாதியை இப்போது பிணமாகத்தான் பார்க்க முடிந்தது என்று அவரது பாட்டி ராஜலட்சுமி கண்ணீர் மல்க கூறினார்.
 

 	"முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வந்தவள்தான்....!"-சுவாதியின் பாட்டி கண்ணீர் பேட்டி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த சுவாதி என்ற 23 வயது  பொறியாளர் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

சுவாதியின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று சென்னை வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுவாதியின் உடலை பெற்றோரிடம் இரவு 7 மணிக்கு காவல்துறையினர் ஒப்படைத்தனர். சுவாதியின் உடலை குண்டூர் கொண்டு சென்ற பெற்றோர், அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்துள்ளனர். இன்று மாலை சுவாதிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.

இந்நிலையில், குண்டூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுவாதியின் பாட்டி ராஜலட்சுமி, "குண்டூரில் ஸ்வாதி பொறியியல் படிப்பு படித்து முடித்தாள். பிறகு GATE-யில் தேர்ச்சியடைந்து ஹைதராபாத்தில் JNTU-வில் இடம் கிடைத்தது. அங்கிருந்து உதவித்தொகையோடு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பயிற்சிக்கு அனுப்பினார்கள்.

அங்கிருந்து மூன்று மாதங்களில் பெங்களூருவில் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். கேரளாவிலிருந்து பயிற்சி பெற்றவர்கள் அனைவரையும் அவர்களே பெங்களூருவுக்கு அழைத்துக் கொண்டார்கள். முதல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஜனவரியில் பொங்கலுக்கு வீட்டிற்கு வந்தாள். அவ்வளவுதான். இப்போது அவளை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது" என்று கண்ணீர் மல்க கூறினார்.