Published:Updated:

அமிர்தா ராயுடன் காதல்; மோடியை போல் மூடி மறைக்கவில்லை: திக்விஜய் சிங்

Vikatan Correspondent
அமிர்தா ராயுடன் காதல்; மோடியை போல் மூடி மறைக்கவில்லை: திக்விஜய் சிங்
அமிர்தா ராயுடன் காதல்; மோடியை போல் மூடி மறைக்கவில்லை: திக்விஜய் சிங்
அமிர்தா ராயுடன் காதல்; மோடியை போல் மூடி மறைக்கவில்லை: திக்விஜய் சிங்

புதுடெல்லி: அமிர்தா ராயுடனான காதலை, மோடியைப் போல் மூடி மறைக்கவில்லை என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

டி.வி.அறிவிப்பாளர் அமிர்தா ராயுடனான காதல் பற்றி திக்விஜய் சிங் கூறும்போது, ''நரேந்திர மோடி திருமணத்தை மூடி மறைத்ததை நான் விமர்சித்தேன். இப்போது எனது காதல் விவகாரத்தை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறேன்.

மோடியைப் போல் நான் வருடக் கணக்கில் பொது மக்களுக்கு தெரிவிக்காமல் திருமணத்தை மூடி மறைக்கவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. இதனால் ஏற்படும் எந்த விவாதத்தையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

அமிர்தாராய் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்து இருக்கிறார். முறைப்படி விவாகரத்து ஆனதும் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம்" என்றார்.