Published:Updated:

குண்டுவெடிப்பும் ஜெயலலிதாவின் கொடநாடு தங்கலும்!

Vikatan Correspondent
குண்டுவெடிப்பும் ஜெயலலிதாவின் கொடநாடு தங்கலும்!
குண்டுவெடிப்பும் ஜெயலலிதாவின் கொடநாடு தங்கலும்!
குண்டுவெடிப்பும் ஜெயலலிதாவின் கொடநாடு தங்கலும்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களை முடுக்கிவிட வேண்டிய முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதா, கொடநாட்டில் தங்கி உள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நெருக்கடியான நேரத்தில் கூட முதல்வர் தலைநகரில் இல்லாத காரணத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாத காரணத்தாலும்தான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ள நிலையில்,. காவல் துறையினரை வழி நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர், நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால்தான்,  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கருணாநிதியின் இந்த குற்றச்சாட்டு மற்றும் ஜெயலலிதா தொடர்ந்து கொடநாட்டில் தங்கியிருப்பது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?