Published:Updated:

2ஜி வழக்கு: மே 26ல் ஆஜராக ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு சம்மன்!

புதுடெல்லி: 2ஜி வழக்கு வழக்கில் வரும் 26ஆம் தேதி ஆஜராகுமாறு ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

2ஜி வழக்கு: மே 26ல் ஆஜராக ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு சம்மன்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெறுவதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடியை தந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதையடுத்து அமலாக்கத்துறை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 10 பேர் மீதும் மற்றும் 9 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இன்று நடந்தது.

இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்பட 19 பேர் வரும் 26 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு  சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு