Published:Updated:

கருப்புப் பண விவரத்தை தர மறுக்கும் சுவிஸ் அரசு: சிதம்பரம் கண்டனம்!

Vikatan Correspondent
கருப்புப் பண விவரத்தை தர மறுக்கும்  சுவிஸ் அரசு: சிதம்பரம் கண்டனம்!
கருப்புப் பண விவரத்தை தர மறுக்கும் சுவிஸ் அரசு: சிதம்பரம் கண்டனம்!
கருப்புப் பண விவரத்தை தர மறுக்கும்  சுவிஸ் அரசு: சிதம்பரம் கண்டனம்!

புதுடெல்லி: இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தர மறுக்கும் சுவிட்சர்லாந்து அரசுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஹெச்எஸ்பிசி கிளைகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரத்தை தருவதில் ஒத்துழைக்க மறுப்பது, இருதரப்பு உறவை பாதிக்கக்கூடியது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் மூன்றாவது முறையாக சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் எவலின் விட்மெருக்கு சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளதாக நிதி அமைச்சக உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேரடி வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின்கீழ் சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரத்தை அளிப்பது அந்நாட்டின் கடமை என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் 26 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அதுபற்றிய விவரமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.