Published:Updated:

முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி பேச்சால் சர்ச்சை!

Vikatan Correspondent
 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி பேச்சால் சர்ச்சை!
முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி பேச்சால் சர்ச்சை!
 முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி பேச்சால் சர்ச்சை!

காலியாபாத்(உ.பி.): சமாஜ்வாதி கட்சிக்கு வாக்காளிக்காத முஸ்லிம்களின் மரபணுவை ( டிஎன்ஏ) சோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றனர். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என பா.ஜனதா தலைவர் ஒருவர் கூற, மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் ஆவேசம் காட்டி, பின்னர் கண்டனக் கணைகளை எதிர்கொண்டார்.

அந்த வகையில் தற்போது அபு ஆஸ்மி வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காலியாபாத் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அபு ஆஸ்மி, " எந்த ஒரு முஸ்லிமாவது சமாஜ்வாதி கட்சியை எதிர்த்தாலோ அல்லது எதிராக வாக்களித்தாலோ, அவரை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் ஆர்.எஸ்.எஸ். ஆளாக இருப்பார்.

சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காத முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள்" எனக் கூறினார்.

இந்நிலையில் அபு ஆஸ்மியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் ரஷித் ஆல்வி, " முஷாஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களின் டிஎன்ஏ-வை பரிசோதிக்க ஆஸ்மி முயற்சிப்பாரா என்பதை என்னால் சொல்ல இயலவில்லை.முஷாஃபர்நகர்  கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லது முகாம்களில் இருப்பவர்களுக்கு அபு ஆஸ்மி டிஎன்ஏ பரிசோதனை செய்யமாட்டார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிகழ்ந்த முஷாஃபர்நகர் கலவரத்தில் 60 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த ஆளும் சமாஜ்வாதி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.