Published:Updated:

சுபாஷ் சந்திரபோஸைப் போன்றவர் மோடி: சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.!

Vikatan Correspondent
சுபாஷ் சந்திரபோஸைப் போன்றவர் மோடி:  சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.!
சுபாஷ் சந்திரபோஸைப் போன்றவர் மோடி: சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.!
சுபாஷ் சந்திரபோஸைப் போன்றவர் மோடி:  சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்.!

புதுடெல்லி: பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் இந்திரேஷ் குமார் கூறுகையில், ''உத்தரபிரதேசத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகும் வகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். மேலும், மக்கள் சரியான முடிவு எடுப்பதை உறுதி செய்வதற்காகவும் களப்பணியாற்றி வருகிறோம்.

வாஜ்பாயும், நரேந்திர மோடியும் ஒரே மாதிரியானவர்கள்தான். இதில் வாஜ்பாய் மகாத்மா காந்தி போன்றவர், மோடி சுபாஷ் சந்திர போஸ் போன்றவர். காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கின் காதல் விவகாரத்துடன், மோடியின் வாழ்க்கையை ஒப்பிடுவது தவறு.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எதிராகப் பேசும் அரசியல்வாதிகளும், எங்களை மதவாதிகள் என்று அழைப்பவர்களும் முட்டாள்கள்'' என்றார்.