Published:Updated:

மக்களின் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன்: மோடி

Vikatan Correspondent
மக்களின் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன்: மோடி
மக்களின் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன்: மோடி
மக்களின் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன்: மோடி

லக்னோ: காங்கிரஸ் தங்களது சொந்த மகிழ்ச்சிக்காக போராடுகிறது. நான் மக்களின் மகிழ்ச்சிக்காக போராடி வருகிறேன் என நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், கலிலாபாத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''சோனியாவும், ராகுல் காந்தியும் தங்களது சொந்த மகிழ்ச்சிக்காக போராடி வருகிறார்கள். நான் மக்களின் மகிழ்ச்சிக்காக போராடுகிறேன். காங்கிரசின் விக்கெட்டுகள் தற்போது வீழ்ந்து வருகின்றன. இனிமேல் அம்மா-மகன் ஆட்சி வரப்போவதில்லை.

மோடி மாடலில் இருந்து நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என சோனியா காந்தி கூறியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக கடவுள் குறித்து சோனியா பேசியதை நான் கேள்விப்பட்டதே கிடையாது. இதிலிருந்து காங்கிரஸ் எவ்வளவு பெரிய நெருக்கடியில் இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் புதிய அரசாங்கத்திற்கான வலிமை மிக்க அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.