Published:Updated:

3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Vikatan Correspondent
3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

புதுடெல்லி: பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக 3வது அணியை காங்கிரஸ் ஆதரிக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், ''காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. நேரடியாக களத்தில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. ஆனால், நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறுவதை ஏற்க முடியாது. மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக காங்கிரஸ், 3வது அணியை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த 1996ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை இழந்து, தேவகவுடா தலைமையில் அரசு அமைந்தபோது, காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. அதேபோன்ற நிலைமை இந்த தேர்தலிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 தமிழகத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி முறியக் காரணம் என்ன என்பது குறித்து கேட்கவில்லை. தனித்து போட்டியிட்டால் மெஜாரிட்டி கிடைக்கும் என ஜெயலலிதா எண்ணி இருக்கலாம்'' என்றார்.