Published:Updated:

3வது அணியை ஆதரிப்பதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

Vikatan Correspondent
3வது அணியை ஆதரிப்பதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!
3வது அணியை ஆதரிப்பதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!
3வது அணியை ஆதரிப்பதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

புதுடெல்லி: 3வது அணியை ஆதரிப்பதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க முடியாமல் போனால், பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுப்பதற்காக, காங்கிரஸ் 3வது அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், 3வது அணிக்கு ஆதரவு அளிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவுக்கு சம்மதம் இல்லை என செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் 3வது அணியை ஆதரிப்பதில்லை என்ற மனநிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அப்போது, காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், பா.ஜ.க. ஆட்சி அமைவதை தடுக்க 3வது அணிக்கு ஆதரவு கொடுக்கலாம் என சிலர் கூறியதாகவும், அதற்கு 3வது அணியை ஆதரிப்பதை விட எதிர்க்கட்சி வரிசையில் உட்காரலாம் என ராகுல் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், கூட்டாட்சியில் ராகுல் காந்திக்கு நம்பிக்கை இல்லை எனவும், காங்கிரஸ் தரப்பில் உறுதியான, வலுவான அரசை ஏற்படுத்த அவர் ஆசைப்படுவதாகவும், இதையடுத்து காங்கிரஸ் செல்வாக்கு இழந்துள்ள மாநிலங்களில் அவர் கவனம் செலுத்த திட்டமிடுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, தேர்தலுக்கு பிறகு மாநில காங்கிரஸ் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.