Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

அ.குணசேகரன், புவனகிரி.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முலாயம், மாயாவதி, கருணாநிதி - மூவரில் யாருடைய பல்டி சூப்பர்? ஏன்?

பெரிய பல்டிக்காரர் என்று நாம் கருணாநிதியைத்​தான் நினைத்திருந்தோம். 'அன்னிய முதலீட்டை நான் ஆதரிக்க மாட்டேன். வியாபாரிகளுக்கு எதிரான நிலையைத் தி.மு.க. எப்போதும் எடுக்காது’ என்று இரண்டு மூன்று நாட்கள் சவால் விட்டார் கருணாநிதி. பரவாயில்லையே என்று பலரும் ஆச்சர்யத்துடன் பார்க்கும்போது, 'மதவாத ஆட்சி வரவிடாமல் தடுக்க காங்கிரஸை ஆதரிப்பதைத் தவிர வேறுவழி இல்லை’ என்று பிளேட்டை திருப்பிப் போட்டார். அன்னிய முதலீட்டை எதிர்த்து விண் அதிரப் பேசினார்கள். ஆனால், ஆட்சியைக் காப்பாற்ற வாக்களித்தனர்.

கழுகார் பதில்கள்!
##~##

இந்தக் குட்டிக்கரணங்களை ரசித்துக்கொண்டு இருந்த​போதே மாயாவதி வந்தார். அவரும் மன்மோகனை ஆதரிப்பவர்தான். அதே நேரத்தில் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடியும் அவருக்கு இருந்தது. மக்களவையில் வெளிநடப்பு செய்து மன்மோகனைக் காப்பாற்றினார். அதேமாதிரி, மாநிலங்களவையிலும் வெளிநடப்பு செய்தால், ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகமாகி... நெருக்கடி ஏற்படும். எனவே மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்கைச் செலுத்தி விட்டார். கருணாநிதி ஒரு வாரத்​தில் பல்டி அடித்தார் என்றால், மாயாவதி இரண்டே நாட்களில் திருப்பித் திருப்பி அடித்தார்.

நம்முடைய கேள்வி இதுதான். அன்னிய முதலீட்டை இந்த அரசாங்கம் கொண்டுவந்தபோது எதிர்த்து வாக்களித்தார்களா... இல்லையா? தங்களது பலத்தைப் பயன்படுத்தித் தடுத்தார்களா... இல்லையா?

மற்றபடி வெளிநடப்பு செய்தோம், எங்கள் எதிர்ப்பை அவையில் பதிவுசெய்தோம் என்பது எல்லாம் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதுதான்.

 சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

அனைத்துக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து சுற்றுலா சென்றால், எப்படி இருக்கும்?

நாடாளுமன்றம் நடப்பது மாதிரி இருக்கும்.

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கழுகார் பதில்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்ற அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருப்பது எந்த தைரியத்தில்?

சாதி காப்பாற்றும் என்ற தைரியத்தில். ஆனால், சாதி மட்டுமே போதாது என்பது அவரின் தலை​வருக்​கும் தெரியும்.

 எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.

கழுகார் பதில்கள்!

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் - இவர்களில் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் யாரிடம் அதிகம் உள்ளது?

விமர்சனம் வந்தால் தாக்கும் பாணிதான் மூவருக்குமே. சில நேரங்களில் தாக்குதல் கூடும்... அல்லது குறையும். அவ்வளவுதான் வித்தியாசம்.

 பி.சாந்தா, மதுரை.

கழுகார் பதில்கள்!

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு சம்பந்தமான பிரச்னையில் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலுமே மத்திய அரசு வெற்றி பெற்று விட்டதே?

அதை வெற்றி என்று சொல்ல முடியாது!

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் தீர்மானம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தது. இதில் அரசுக்கு எதிராக 218 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக 253 வாக்குகளும் கிடைத்தன. 545 எம்.பி-க்களைக்கொண்ட அவையில் அன்று 471 உறுப்பினர்கள் மட்டும்தான் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்களும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள்தான். ஆனால், ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவாக 123 வாக்குகளும் மத்திய அரசை எதிர்த்து 102 வாக்குகளும் பதிவாகி உள்ளன. இங்கேயும் சமாஜ்வாதிக் கட்சி வெளிநடப்பு செய்தது. ஆனால் மாயாவதி, இங்கு மத்திய அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்தார்.

இரண்டு அவைகளிலும் ஏதோ பெரும்பான்மை பலத்தோடு அந்தத் தீர்மானம் நிறைவேறவில்லை. 35 வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவையிலும் 21 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மாநிலங்களவையிலும் தீர்மானம் வென்றுள்ளது. எண்ணிக்கை அடிப் படையில் பார்த்தால், மத்திய அரசுக்கு வெற்றி​தான். எண்ணங்களில் நோக்கினால் தோல்வி.

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

உலகிலேயே சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் சோனியாவுக்கு 12-வது இடமும், மன்மோகன் சிங்குக்கு 19-வது இடமும் கிடைத்து இருக்கிறதே?

சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் சோனியா​வுக்கு இடம் தரப்பட்டது சரியானதுதான். ஆனால், சோனியா கீ கொடுத்தால் நகரும் பொம்மைக்கும் அந்தப் பட்டியலில் இடம் தந்தது அபத்தம்.

ஒரு காலகட்டத்தை தன்னுடைய அதிகாரத்தால் அடக்கக்கூடியவர்களைத்தான் சக்தி வாய்ந்த தலைவர்களாகச் சொல்ல முடியும். அப்படி மன் மோகனைச் சொல்ல முடியாது.

 அ.ராஜப்பன், கருத்தம்பட்டி.

கழுகார் பதில்கள்!

மத்திய அரசு 2014 வரை தாக்குப் பிடிக்குமா?

நிச்சயமாக. இப்போது திடீர் தேர்தலை யாரும் விரும்பவில்லை. ஆளும் கட்சிக்கு அது அவசியம் இல்லை. எதிர்க் கட்சிக்கும் தேர்தலைச் சந்திக்க தைரியம் வரவில்லை.

 கலைப்ரியன், நாமக்கல்.

கழுகார் பதில்கள்!

மின்சாரத்தை செலவு செய்வதைக் காட்டிலும் சேமிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்கிறாரே மின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்?

இரண்டையுமே செய்ய முடியாது. செலவு செய்யவும் மின்சாரம் இல்லை, சேமிக்கவும் மின்சாரம் இல்லை என்பது நத்தம் விஸ்வநாதனுக்குத் தெரியாது என்றால், நஷ்டம் ஆளும் கட்சிக்குத்தான்.

 எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

கழுகார் பதில்கள்!

அரசியல் கட்சிகளுக்கும் மடங்களுக்கும் வாரிசு தேவையா?

சொத்துக்களைக் காப்பாற்ற நிச்சயம் தேவை.

 இ.பா.ஹரிராமகிருஷ்ணன், இசையனூர்.

கழுகார் பதில்கள்!

கட்சிகளைப் பார்த்து மக்கள் எப்போது பயப்படுகிறார்கள்? மக்களைப் பார்த்து கட்சிகள் எப்போது பயப்படுகின்றன?

ஆளும் தகுதியை ஒரு கட்சி அடையும்போது, அந்தக் கட்சியைப் பார்த்து மக்கள் பயப்படுகிறார்கள். 'என்ன பாடுபடுத்தப்போகிறார்களோ’ என்பதே பயத்துக்குக் காரணம்.

அதேகட்சி, எதிர்க்கட்சி ஆகும்போது மக்களைப் பார்த்து பயப்படுகிறது. 'நம்மைத் தண்டித்தவர்கள்’ என்பதே, பயத்துக்குக் காரணம்.

 எம்.சிவகுமார், வேதாரண்யம்.

கழுகார் பதில்கள்!

அரவிந்த் கெஜ்ரிவால் விஷயத்தில் அண்ணா ஹஜாரேவுக்கு ஏன் இத்தனை குழப்பம்?

ஊழலுக்கு எதிராக மக்களைத் திரட்டியதை, அரவிந்த் அறுவடை செய்கிறார் என்ற வருத்தம் அண்ணா ஹஜாரேவுக்கு இருக்கிறது. அந்த வருத்தம் பொறாமையாக வளர்வதையே அவரது விமர்சனங்​கள் காட்டுகின்றன. அரவிந்த் குறித்த கமென்ட்டுகள், ஹஜாரேவுக்குப் பெருமை தரக்கூடியதாக இல்லை.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணி அமைந்தால், அ.தி.மு.க-வின் 'நாற்பதுக்கு நாற்பது’ கனவுக்கு மங்களம்​தானே?

ம்!

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism