Published:Updated:

''கடவுளின் கருணை மட்டுமே உதவமுடியும்!''

''கடவுளின் கருணை மட்டுமே உதவமுடியும்!''

''கடவுளின் கருணை மட்டுமே உதவமுடியும்!''

''கடவுளின் கருணை மட்டுமே உதவமுடியும்!''

Published:Updated:
##~##

தென் இந்தியாவில் முதல் முறை​யாக பி.ஜே.பி. ஆட்சியைப் பிடித்த மாநிலம் கர்நாடகா. ஆளும் பி.ஜே.பி. அரசு, எந்த நேரமும் கவிழும் அபாயத்தில் இருக்கிறது. காரணம், கர்நாடக பி.ஜே.பி-யின் கிங்மேக்கராக வலம்வந்த எடியூரப்பாவேதான். திடீரென பி.ஜே.பி-க்கு முழுக்குப்போட்டு, கர்நாடக ஜனதா கட்சியை ஆரம்பித்து மாநில அரசியலில் அனல் கிளப்புகிறார். பெங்களூருவில் எடியூரப்பாவின் இல்லத்தில் ஒரு சந்திப்பு... 

''கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பி.ஜே.பி-யில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நம்பிக்கைத் துரோகம்; அவமானம்; தோல்வி!

வெற்றியைவிட தோல்வி நிறையப் பாடம் சொல்லித்தரும் என்​பார்கள். எனக்கு ஏற்பட்ட மன

''கடவுளின் கருணை மட்டுமே உதவமுடியும்!''

உளைச்சலில் இருந்து இன்னும் முழுமையாக வெளிவர முடியவில்லை. இருப்பினும் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, பி.ஜே.பி-யை கர்நாடகாவில் மண்ணைக் கவ்வ வைப்பேன். எடியூரப்பா என்றால் யார் என்பதைப் புரிய வைப்பேன்!''

''கர்நாடகத்தில் உங்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என நினைக்கிறீர்​களா?''

''ஹாவேரியில் எனது கட்சியை ஆரம்பித்தபோது, ராத்திரி பகலாகக் கடும் மழையிலும் பனியிலும் ஆர்ப்பரித்த லட்சக்கணக்கான‌ மக்கள் வெள்ளம்தான் உங்கள் கேள்விக்கான என்னுடைய சரியான பதிலாக இருக்கும். கர்நாடகம் முழுக்க பி.ஜே.பி. மீதும், காங்கிரஸ் மீதும் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். விவசாயிகளும் தொழி​லாளர்களும் உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால், எந்தக் கட்சியின் தலைவரும் மக்களைத் தைரியமாகச் சந்திக்க முடியாமல் ஓடிஒளிகிறார்கள். என் மீது எந்தத் தவறும் இல்லாததால் தைரியமாக மக்களைச் சந்திக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்!''

''வருகிற சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யைத் தோற்கடிக்க காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பீர்களா?''

''224 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடு​வோம். அதற்காகத்தான் 224 தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று மக்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறோம். இப்போது என்னிடம் 60 எம்.எல்.ஏ-க்களும், 10 எம்.பி-க்களும், 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.சி-க்களும் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யின் அடிமட்டத் தொண்டர்களுக்கு என் மீதான பாசம் இன்னும் குறையவில்லை. எங்கு போனாலும் 'அப்பாஜி... அப்பாஜி’ என என்னைப் பின்தொடர்கிறார்கள். அதனால், 50 சதவிகிதம் இளைஞர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு வழங்கி, மெஜாரிட்டியாக வெற்றி பெறுவோம். பி.ஜே.பி-யைச் சாய்ப்பதற்குக் கூட்டணி எல்லாம் தேவையே இல்லை!''

''முன்பு, ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வர் ஆக்கியது நான்தான். அதனால், ஆட்சியைக் கவிழ்க்க மாட்டேன் என் றீர்கள். இப்போது, எனது ஆதர​வாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்கிறீர்கள். பி.ஜே.பி. ஆட்சியைக் கவிழ்ப்பீர்களா... இல்லையா?''

''இப்போதும் சொல்கிறேன். சதானந்த கவுடாவை​யும் ஜெகதீஷ் ஷெட்டரையும் முதல்வராக்கியது

''கடவுளின் கருணை மட்டுமே உதவமுடியும்!''

நான்தான். அதனால், ஆட்சியைக் கவிழ்க்கவோ, கெட்ட பெயரை ஏற்படுத்தும் எண்ணமோ எனக்குத் துளியும் இல்லை. ஆனால், பி.ஜே.பி-யின் மேலிடத் தலைவர்களின் பேச்சையும், ஈஸ்வரப்பாவின் யோசனைகளையும் கேட்டுக்கொண்டு எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்த நிமிடமே ஆட்சி தானாகவே கலையும். இது, ஜெகதீஷ் ஷெட்டருக்கும் ஈஸ்வரப்பாவுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். ஹா... ஹா... ஹா... (சத்தமாக சிரிக்கிறார்)!''

''காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம், பிரதமர்  சொன்ன பிறகும் கர்நாடக அரசு பிடிவாதமாக தமிழகத்துக்குத் தண்ணீரை மறுப்பது நியாயம்தானா?''

''கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை இல்லை. எந்த அணையிலும் போதிய நீர் இருப்பு இல்லை. இதில் 12 டி.எம்.சி. தண்ணீர் எங்கிருந்து தர முடியும்? மைசூர், மண்டியா மாவட்ட விவசாயி​களே விவசாயம் செய்ய முடியாமல், வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். சிலர் தற்கொலைக்கும் முயன்று வருகிறார்கள். இன்னும் இரண்டு மாதங்கள் போனால் நாங்கள் குடிநீருக்​காகவே தவிக்க வேண்டி வரும் என்பதுதான் யதார்த்த நிலைமை. அதனால்தான் தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிட முடியாத இக்கட்டான சூழலில் இருக்கிறோம். இதை தமிழக மக்களும், தமிழக அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது நமக்குக் கடவுளின் கருணை மட்டுமே உதவ முடியும்!'

'’உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத் தமிழர் தொடர்பான பிரச்னையையும், காவிரி நீர் பிரச்னையையும் எப்படி அணுகுவீர்கள்?''

'பெங்களூருவில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த தமிழ்க் கவிஞர் திருவள்ளுவர் சிலை, என்னுடைய தொடர் முயற்சியாலே திறக்கப்பட்டது. இதை, நான் பெரிதும் மதிக்கும் என் பெரிய அண்ணன் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அந்த மேடையிலேயே சொன்னார். அதேபோல், சென்னையில் கன்னட அறிஞர் சர்வக்ஞர் சிலையையும் திறந்து என்றைக்கும் கன்னடர்களும் தமிழர்களும் நட்புடன் வாழ வழிவகை செய்து கொடுத்தேன். அதேபோல, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் மீது அளவுகடந்த அன்பும் நட்பும் கொண் டிருக்கிறேன் என்பதை அவர்கள் அறிவார்கள். என்னுடைய விருப்பம் என்றைக்கும் ஒன்றுதான். கன்னடர்களும் தமிழர்களும் சகோதரர்கள். அதனால் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்''

கைகுலுக்கி விடைகொடுக்கிறார் எடி!

- இரா.வினோத்

படங்கள்: ஜஸ்டின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism