Published:Updated:

நரேந்திர மோடி ஒரு கழுதை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு!

Vikatan Correspondent
நரேந்திர மோடி ஒரு கழுதை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
நரேந்திர மோடி ஒரு கழுதை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
நரேந்திர மோடி ஒரு கழுதை: மம்தா பானர்ஜி கடும் தாக்கு!

கொல்கத்தா: நரேந்திர மோடி ஒரு கழுதை என மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்றபோது ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, ''சாரதா சிட்பண்ட் மோசடிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் தொடர்பு உள்ளது" என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், ''மம்தா வரைந்த ஓவியத்தை சாரதா சிட்பண்ட் ஊழல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் 1.5 கோடி ரூபாய் கொடுத்து எப்படி வாங்கினார்?" என்றும் கேள்வி எழுப்பினார்.

இது மம்தா பானர்ஜியை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, தற்போது மம்தா பானர்ஜி பேசும் எல்லா பொதுக் கூட்டங்களிலும் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

இந்நிலையில்,  கொல்கத்தாவில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் பேசிய மம்தா, பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை ஒரு கழுதை என விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ''நரேந்திர மோடியை நாம் மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய நாகரீகம் கருதி அனுமதி கொடுத்துள்ளோம். ஆனால், அவர் இங்குள்ள சிலரை திருப்பி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். நாம் நினைத்தால் அந்த கழுதையை கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கிய மறு வினாடியே திருப்பி அனுப்ப முடியும்" என்று பேசினார். மோடியை ஏற்கனவே அவர் ''ஆபத்தான மனிதர்", ''பிசாசு" என்றெல்லாம் பேசியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மோடியிடம் கருத்து கேட்டபோது, ''நான் மேற்கு வங்கம் செல்லும்போது மம்தா என்னை கைது செய்யலாம். அவரது விருந்தாளியாக அங்குள்ள சிறையில் இருக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்றார்.