Published:Updated:

ராகுல் விமர்சனத்தால் பதவி விலக சொன்ன மன்மோகன் மகள்!

Vikatan Correspondent
ராகுல் விமர்சனத்தால் பதவி விலக சொன்ன மன்மோகன் மகள்!
ராகுல் விமர்சனத்தால் பதவி விலக சொன்ன மன்மோகன் மகள்!
ராகுல் விமர்சனத்தால் பதவி விலக சொன்ன மன்மோகன் மகள்!

மும்பை: ராகுல் காந்தியின் விமர்சனத்தால் கோபமடைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள், தனது தந்தை  பதவி விலக வேண்டும் என எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக மன்மோகன் சிங்கின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங்கிடம் உதவியாளராக இருந்தவர் சஞ்சயா பாரூ. இவர் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி பற்றி ''த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

மும்பையில் நேற்று அந்த புத்தகத்தை வெளியிட்டு சஞ்சயா பாரூ பேசியபோது, ''2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வெற்றி தன்னால் வந்தது என்று மன்மோகன் சிங் நினைத்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அவரை கண்டுகொள்ள வில்லை. எல்லாருமே ராகுல் காந்தியால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக சொன்னார்கள்.

மன்மோகன் சிங் இப்படி பல தடவை அவமானப் படுத்தப்பட்டார். அவரிடம் நான், பிரதமர் பதவியில் இருந்து விலகி விடுங்கள் என்று கூறினேன். அவர் தான் பொறுமையாக, மவுனமாக இருந்து விட்டார்.

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை ராகுல்காந்தி, முட்டாள் தனமானது என்று நிருபர்களிடம் கூறினார். அப்போதும் நான் பதவி விலகுங்கள் என்றேன்.

இது தொடர்பாக நான் பிரதமரின் மகளுக்கு, ''மன்மோகன் சிங் பதவி விலகுவது நல்லது" என்று குறுஞ் செய்தி அனுப்பினேன். அதற்கு பதில் அனுப்பிய பிரதமரின் மகளும், மன்மோகன்சிங் பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவர் காங்கிரஸ் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விட்டார்" என்று கூறினார்.