Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

ச.அ.அலெக்சாண்டர், வரதராஜன்பேட்டை.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 காந்திஜி - நேதாஜி இருவரும் முரண்பட்டதற்கு என்ன காரணம்?

கழுகார் பதில்கள்!
##~##

சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்பதே இவர்களின் இறுதி லட்சியம். ஆனால், அதற்கான வழிமுறையில்தான் வித்தியாசம் இருந்தது. அகிம்சைப் பாதையை காந்தி வழிமொழிந்தார். 'அராஜகம் செய்யும் பிரிட்டிஷ் அரசுக்கு வன்முறைப் பாதைதான் புரியும்’ என்று நேதாஜி நினைத்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேதாஜி தேர்வானபோது, இந்த முரண்பாடு அதிகமானது. 1939-ல் திரிபுரா காங்கிரஸில் நேதாஜி மீண்டும் தேர்வானதை காந்தி விரும்பவில்லை. 'வேறு ஒரு தலைவரின் கீழ் காங்கிரஸ் நன்றாகப் போராட முடியும் என்று நீங்கள் நினைத்தால், நான் மகிழ்ச்சியுடன் விலகிக்கொள்வேன். ஆனால், மக்களின் போராட்டத்தை சமீப காலமாக நீங்கள் நடத்தி வந்துள்ள முறை என் மனதுக்குப் பிடித்த​மானதாக இல்லை என்று காந்திஜிக்குக் கடிதம் எழுதினார் நேதாஜி. ஆனால், அவரது வழிமுறையை காந்தி ஏற்கவில்லை. முழு முரண்​பாட்டுக்கு இதுதான் முதல் காரணம். இருந்தாலும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அன்பு செலுத்தினர்.

'நம் இருவரிடம் உள்ள உறவு இதயத்தில் இருந்து வருபவை. எனவே அவை இந்தக் கருத்து வேறுபாடுகளைத் தாண்டியும் நிற்க முடியும்’ என்று எழுதி இருக்கிறார் காந்தி.

 க.சுல்தான் ஸலாஹீத்தீன் மழாஹிரி, காயல்​பட்டினம்.

கழுகார் பதில்கள்!

தலைவர்கள் இயற்கையான மரணத்தைத் தழுவும்போது, தொண்டர்கள் பொதுச்சொத்தைச் சேதப்படுத்துவது எதைக் காட்டுகிறது?

அந்தத் துன்பகரமான நிகழ்வைக்கூட கொண்டாட்​டமாக மாற்றும் மனோபாவம்தான். அது, அந்தத் தலைவருக்குக் காட்டும் அஞ்சலி அல்ல. கும்பல் கூடுவதால் ஏற்படும் தைரியம். தனி மனிதனாக இருந்தால், அதைச் செய்ய மாட்டார்கள். தனி​யாக இருக்கும்போதும், கும்பலில் சேரும்போதும் ஒருவரின் மனம் எப்படி மாறுகிறது என்பதை மனோதத்துவவியல் நுட்பமாய் வர்ணிக்கிறது.

இம்மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று எந்த தலைவர்களும் தங்களது தொண்டர்களுக்கு எடுத்துச் சொல்லாதன் விளைவு, இவை நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது.

வி.கார்மேகம், தேவகோட்டை.

கழுகார் பதில்கள்!

தொடங்கிய அன்றே அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சிக்கு 1.40 கோடி ரூபாய் நன்கொடை சேர்ந்து விட்டதாமே?

அரவிந்த் கெஜ்ரிவால் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிமனிதனுக்குத் தரப்படும்

லஞ்சப் பணமே, கட்சிகளுக்குத் தரப்படும் நன் கொடை என்பதை அவர் உணர வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் 'நன்கொடைகள்’ கொடுத்துள்ளன. டெல்லியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தத் தகவலைத் திரட்டி வெளியிட்டுள்ளது. (ஜூ.வி-யிலும் இதுதொடர்பான கட்டுரை 7.10.2012 இதழில் வெளியாகி உள்ளது). இத் தகைய நிறுவனங்கள் எதற்காக நன்கொடைகள் தருகின்றன என்பது அனைவரும் அறிந்ததுதான். அரவிந்தும் அறிவார்!

 பி.சாந்தா, மதுரை-14.

கழுகார் பதில்கள்!

மேலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜய், 'டெங்கு என்பது வெறும் வைரஸ்தான். இதற்கு நிவாரணம் தர முடியாது’ என்றதுடன், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினரையும் சந்திக்க மறுத்தார். மக்கள் பிரதிநிதி ஒருவர் இப்படிச் செயல்படலாமா?

'டெங்கு’ என்ற வார்த்தையையே இவர்கள் ஏற்கவில்லை. டெங்கு காரணமாக இறந்தவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் என்றே மருத்துவமனைகள் சான்று கொடுத்துள்ளன. இந்தப் பாதிப்பு ஏற்பட்டவர்​களுக்கு நிலவேம்புக் கசாயம் கொடுத்தால் நல்லது என்று ஆரம்பக் கட்டத்தில் சொல்லப்பட்ட ஆலோ​சனையை நிராகரித்தனர். நோய் முற்றி இறப்பும் இழப்பும் அதிகமானதும், நிலவேம்புக் கசாயம் குடிக்க வலியுறுத்தி, லட்சக்கணக்கில் செலவு செய்து நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் கொடுத்தனர்.

நோயைத் தடுப்பதைவிட மறைப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. 'டாக்டரிடமும் வக்கீலிடமும் எதையும் மறைக்கக் கூடாது’ என்பார்கள். டெங்கு விஷயத்தில், அமைச்சராக இருக்கும் 'டாக்டர்’ விஜய் மறைப்பது மோசமானது.

 டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இன்று வரை தொடர்ந்​திருந்தால், யாருக்கு லாபமாக இருந்திருக்கும்?

தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களுக்கு!

அவர்களது கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் ஓரளவு செவிமடுத்திருப்பார்கள் அல்லவா?

 அர்ஜுனன்.ஜி, திருப்பூர் - 7.

கழுகார் பதில்கள்!

மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது எப்படி?

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரித்து வாக்களித்து விட்டால், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துவிட முடியும் என்று நினைக்கிறார் கருணாநிதி. என்ன காமெடி சார் இது?

ஆனால், 99 முதல் 2004 வரை பி.ஜே.பி-யின் மதவாதம் கருணாநிதியின் கண்ணுக்குத் தெரிய​வில்லை. ஏனென்றால், கேட்ட இலாகா எல்லாம் கொடுத்து சொகுசாக வைத்துக் கொண்டனர் அல்லவா?

 சீர்காழி சாமா, தென்பாதி.

கழுகார் பதில்கள்!

'டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டுப்போடும் போராட்டத்தைத் தொடங்கப் போகிறேன்’ என்று, ராமதாஸ் அறிவித்துள்ளார். அதற்குப் பூட்டு சப்ளை செய்வதற்கான டெண்டர் எடுக்க ஆசை. நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் தொழில் நஷ்டம் அடைந்துவிடும் ஜாக்கிரதை. ஒரே ஒரு பூட்டு வாங்குவார்கள். அதையும் மாலையில் திருப்பிக்கொடுத்து விடு வார்கள். ராமதாஸ் அறிவித்திருப்பது பூட்டுப்போடும் போராட்டம் அல்ல... பூச்சாண்டி காட்டும் போராட்​டம்!

 வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்!

'தமிழக அரசு இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பதற்குப் பதிலாக இனி கொசுவலை கொடுக்கலாம்’ என்கிறாரே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?

மின்சாரமே இல்லாத நேரத்தில் மிக்ஸியும் கிரைண்டரும் கொடுத்தால், மக்கள் அடிக்க வர மாட்டார்களா? அதனால்தான் வந்து இறங்கிய மிக்ஸி, கிரைண்டர்களை மொத்தமாகப் போட்டு மூடி வைத்துள்ளனர். அநேகமாக, 2013 கடைசியில் அல்லது 2014 தொடக்கத்தில் கொடுப்பார்கள். அப்போதுதான் மின்வெட்டு குறையும், நாடாளு​மன்றத் தேர்தலும் நெருங்கி வரும். ரெண்டு லட்டு தின்னலாம்!

 எம்.சம்பத், வேலாயுதம் பாளையம்.

கழுகார் பதில்கள்!

தமிழகத்தில் 'அம்மா ஆசை’ (அமாவாசை) ஆட்சி நடக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளாரே?

இது, ஸ்டாலின் சொன்னது அல்ல. தி.மு.க. நடத்திய பேச்சுப் போட்டியில் வென்ற ஒரு மாணவி, தஞ்சாவூரில் பேசியது. 'அம்மா ஆசைப்பட்ட ஆட்சி இது. அதனால்தான் இது அமாவாசை ஆட்சியாக ஆகிவிட்டது’ என்றார் அந்த மாணவி.

 நாகை தமிழ்ச்சிங்கம், சென்னை-102.

கழுகார் பதில்கள்!

கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி’யை ஜெயலலிதா படிப்பாரா?

ஞாயிற்றுக்கிழமை தோறும் 'முரசொலி’ இணைப்​பாக வரும் நெஞ்சுக்கு நீதியை முதலில் தி.மு.க. தொண்டர்கள் முழுமையாகப் படிக்கட்டும்.

ஜெயலலிதா படித்தாக வேண்டிய விஷயம் கருணா​நிதி எழுதியதில் இருந்தால், அவருக்குப் படிக்கக் கொடுக்கப்படுகிறது என்றே தகவல்.

 மா.ஜெகதீசன், சீர்காழி.

கழுகார் பதில்கள்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன், மின்சாரத்தை முழுமையாகக் கொடுத்துவிட்டால், அ.தி.மு.க. அணிதான் வெற்றி பெறும். மக்கள் பழசை மறந்துவிடுவார்கள் என்பது சரியா?

உண்மைதான். கவலையையும் கஷ்டங்களையும் மக்கள் மறக்கவே விரும்புகிறார்கள் அதுதான் யதார்த்தம். மக்களுடைய மறதி மீதுதான் கட்சிகளின் மாளிகைகள் கட்டப்படுகின்றன.

'நம்ம தலைவிதி இது’ என்று சமாதானம் செய்து​கொள்கிறோம். அதுவும் அரசியல்வாதிகளுக்கு சாத க​மாக ஆகிவிடுகிறது.

ஆனால் ஒன்று... நாடாளுமன்றத் தேர்தலின் போதுகூட முழுமையாக மின்சாரத்தைக் கொடுத்து​விட முடியாது. அதற்கான திட்டமிடுதல் இருப்​பதாகத் தெரியவில்லை. தொலைநோக்குச் சிந்தனை​யுடன் செயல்பட்டால் மட்டுமே அடுத்த சட்டமன்றத் தேர்​தலுக்குள் ஓரளவாவது மின் வெட்டை கட்டுப்படுத்த முடியும்!

 செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

கழுகார் பதில்கள்!

அரசியல் தலைவர்கள், பிற அரசியல்வாதிகளை மறைமுகமாகச் சாடுவது நாகரிகமா?

அரசியல்வாதிகளின் ஒரே பொழுதுபோக்கு அதுதான். அதையும் பறித்துவிடாதீர்கள்!

கழுகார் பதில்கள்!