Published:Updated:

கங்கை பூஜை: மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி!

Vikatan Correspondent
கங்கை பூஜை:  மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி!
கங்கை பூஜை: மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி!
கங்கை பூஜை:  மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி!

வாரணாசி: கங்கை பூஜைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுளள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும், ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கங்கையில் பூஜை செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் மோடி அனுமதி கேட்டிருந்தார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் இணையத்தில், ''கங்கை பூஜை என்பது மத ரீதியான சடங்கு. அது ஒரு அரசியல் நிகழ்வு இல்லை.

இந்த பூஜைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் என்ன தெடர்பு உள்ளது. இப்படியெல்லாம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோருவதன் மூலம் தனது சிறு செயல்களிலும் நரேந்திர மோடி அரசியல் ஆதாயம் தேடுகிறார்'' எனக் கூறியுள்ளார்.