Published:Updated:

மோடி கூட்டத்துக்கு அனுமதி அளிக்காதது சரியே: பா.ஜ. குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையர் பதில்!

Vikatan Correspondent

புதுடெல்லி: வாரணாசியில் நரேந்திர மோடி கூட்டத்துக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல்பாடு சரியானதே என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், டெல்லியில் இன்றூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்து பல அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

ஆணைத்துக்கு எதிராக தேசியக் கட்சி ஒன்று போராட்டம் நடத்தியது ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளின் போராட்டம் வருத்தமளிப்பதாக உள்ளது. ஜனநாயக நாட்டில் புகார் கூற கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆணையத்தை விமர்சிக்கும்போது கட்சிகள் தங்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்.

வாரணாசியில் நரேந்திர மோடியின் கூட்டத்துக்கு அனுமதி அளிக்காத அதிகாரியின் செயல்பாடு சரியானதுதான். நியாயமான தேர்தலை நடத்தும் அதிகாரங்களை அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்துவதில் ஆணையம் உறுதியாக உள்ளது'' என்றார்.