Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?

Published:Updated:
##~##

''கோட்டையில் கலெக்டர்கள் மாநாட்டில் இருக்கி​றேன்...'' என்று முன்கூட்​டியே தகவல் தந்த கழுகார், மதிய உணவு இடை​வேளையின்போது நம் அலுவலகத்துக்குப் பறந்து வந்தார். 

''மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மாநாடு தொடங்கி விட் டது. ஓர் ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கி முதல்வர் ஜெயலலிதா விரிவாகப் பேசினார். மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது. போலீஸ் மாநாட்டில்தான் கார சாரமான விவாதங்கள் இருக்கும். இந்த மாநாட்டு மேடை பலரையும் உன்னிப்​பாகக் கவனிக்க வைத்தது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு வலதுபுறம் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உட்கார்ந்து இருந்தார். இடதுபுறம் உள் துறைச் செயலாளர் ராஜகோபால் இருந் தார். கடந்த முறை, மாவட்ட ஆட்சியர் மாநாடு நடந்தபோது, அந்த இடத்தில் டி.ஜி.பி.ராமானுஜம்தான் இருந்​தார். இந்த முறை அவருக்கு ஒரு சேர் தள்ளி இருக்கை ஒதுக்கப்பட்டது. பொதுவாக உள் துறைச் செயலாளருக்கு மேடையில் இடம் ஒதுக்க மாட்டார்கள். கீழே முன் வரிசையில்தான் இருக்கும். ஆனால் இப்போது, ராஜகோபாலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது பலரையும் கவனிக்க வைத்தது. இந்தக்கூட்டத்தில், ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்று அனைவரையும் விழிவிரிய வைத்தது. அது, கிரானைட் விவகாரம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்படி என்ன சொன்னார்?''

''கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமிக்கு 15 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தேடப்பட்ட துரை தயாநிதிக்கு முன் ஜாமீன் கிடைத்து விட்டது. இன்னும் பலரும் ஜாமீனில் வெளியில் வந்து விட்டனர். அதனால், 'அவ்வளவுதான் கிரானைட் வழக்கு. அனைத்தும் பணால்’ என்று பேச

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?

ஆரம்பித்தனர். ஆளும் கட்சியில் இருக்கும் அமைச்சர்கள், மதுரைப் பிர முகர்கள், முக்கியப் பிரமுகர்களே இப்படி நியூஸ் கிளப்பிய நிலையில், கிரானைட் மோசடி விவகாரத்தில் தமிழக அரசும் காவல் துறையும் எப்படிச் சிறப்பாக செயல்பட்டன என்பதைத் தன்னுடைய சாதனையாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். கிரானைட் நடவடிக்கை காரணமாக சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கற்களை மதுரை மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்திருப்பதாகவும் 9,783 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் முதல்வர் சொல்லியுள்ள கணக்கு மலைக்க வைத்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது கிரானைட் வழக்கில் ஜெயலலிதா உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை கிரானைட் தரப்புக்குச் சொல்லி வந்த மதுரை அரசு வக்கீல் ஒருவருக்குக் கல்தா கொடுக்கப்​பட் டதை பி.ஆர்.பி. தரப்பு எதிர்​பார்க்கவில்லை. இந்த நிலையில் மறைமுகமான சதி ஒன்று கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக ஆளும் கட்சியினர் மூலமாகச் செய்யப்​படுகிறது.''

''அது என்ன?''

''அன்சுல் மிஸ்ரா கறாராக நடக்கக்கூடியவர். 'இவர் நம் கட்சியினருக்கு உதவுவது இல்லை. இவரை வைத்திருந்தால் நாடாளு மன்றத் தேர்தலில் நாம் ஜெயிக்க முடி யாது’ என்ற கோணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் மந்திரி​களிடம் புலம்ப ஆரம்பித்துள்ளனர். பி.ஆர்.பி. தரப்பின் அடுத்த அஜெண்டா, அன்சுல் மிஸ் ராவை மதுரையில் இருந்து தூக்குவதுதான். இவை அனைத்துக்கும் முதல்வரின் இந்தப் பேச்சு செக் வைத்துவிட்டது.''

''மூன்று நாள் மாநாடு முடிந்த பிறகுதான் முழுமையாகப் பேச முடியும். சரி, அ.தி.மு.க. செயற்குழு தேதியை திடீரென்று எதனால் மாற்றினர்?''

''அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 28-ம் தேதி நடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதை 31-ம் தேதிக்கு மாற்றிவிட்டார் ஜெயலலிதா. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் பொதுக்குழு நடத்த முதலில் 17 அல்லது 19-ம் தேதிக்குத்தான் புக் செய்தார்களாம். அன்றைய தினம், கோட்டையில் கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி-க்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டதால், பொதுக்குழுவை 28-ம் தேதிக்கு மாற்றினர். இப்போது அதுவும் மாற்றப்பட்டு 31-ம் தேதி ஆனது. '28-ம் தேதி அன்று ஆருத்ரா தரிசனம் என்பதால் முக்கியமான வழிபாடுகளை முதல்வர் நடத்துவார். அதனால்தான் இந்த மாற்றம்’ என்கிறார்கள்.  இந்தத் தேதி மாற்றம் அமைச்சர்​களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் தூக்கம் இல்லாமல் செய்து விட்டதாம். 'சில மாற்றங்களைச் செய்துவிட்டு கூட்டம் நடத்தலாம் என்று முதல்வர் திட்டம் போட்டுள்ளார்’ என்று யாரோ கிளப்பி​விட்டதுதான் இந்த பயத்துக்குக் காரணம்'' என்ற கழுகார் பெங்களூரு மேட்டரைக் கையில் எடுத்தார்...

''பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கு சசிகலா தரப்பை அதிகமாகப் பயமுறுத்தி வருகிறது. 19-ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும். இது​வரை கேட்கப்படாத கேள்விகளுக்கு அன்று முதல் பதில் சொல்லியாக வேண்டும். வழக்கில் சேர்க்கப்படாத சுமார் 60 ஆவணங்கள், அதாவது, 12 ஆயிரம் பக்கங்களைத் திருப்பிக் கேட்டார் சசிகலா. அதை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார். இவை மட்டும் அல்ல, மேலும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்கங்களைக்கொண்ட ஆவணங்கள் கோர்ட் கஸ்டடியில் பீரோவில் அடைந்து​கிடக்கிறதாம். ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் தொடர்புடைய இடங்களில் பல கட்டங்களாக நடந்த ரெய்டுகளின்போது போலீஸாரால் அள்ளிக்கொண்டு வந்தவற்றை, அப்படியே கோர்ட்டில் ஒப்படைத்து விட்டனர். அவற்றை பீரோவில் வைத்துப் பத்திரமாக கோர்ட்டில் பராமரிக்கிறார்களாம். அதை கோர்ட் தனக்குத் திருப்பித் தந்தால்தான் கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரிவரப் பதில் சொல்ல முடியும் என்பதில் சசிகலா விடாப்பிடியாக இருக்கிறா

ராம்.''  

''புரிகிறது... தள்ளுபடியை எதிர்த்து மேல் கோர்ட்​டுக்குப் போவார். இதையே காரணம் காட்டி,

மிஞ்சியிருக்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் கட்டத்தை சசிகலா இன்னும் தள்ளிப்போடுவார். அப்படித்தானே?''

''இருக்கலாம்!'' என்ற கழுகார், பலரும் மறந்தே​போய்விட்ட ராமஜெயம் மேட்டரை எடுத்தார்...

''ராமஜெயம் வழக்கில் குற்றவாளியை போலீஸ் நெருங்கி விட்டதாக திடீரென பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஆனால், ஒன்பது மாதங்களாக ஒருவரைக்கூட பிடித்ததாகத் தெரியவில்லை. அதனால்தான், இதெல்லாம் போலீஸே பரப்பும் 'பில்டப்' என்றுதான் திருச்சி மக்கள் இப்போதெல்​லாம் நினைக்கிறார்கள். ஆனால், இந்த வாரத்தில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் டீம் திடீரென சென்றுள்ளது.''

''ராமஜெயம் வழக்கை விசாரிப்பது சி.பி.சி.ஐ.டி. பிரிவுதானே? இதில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு என்ன வேலை?''

''ராமஜெயம் இறந்த சமயத்தில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். பொதுவாக, மாநில அரசோ அல்லது நீதிமன்றமோ கேட்டால்தான் சி.பி.ஐ. நுழையும். ஆனால், ராமஜெயம், தி.மு.க-காரர் என்பதால் ஜெயலலிதா அரசு கேட்காது. கோர்ட் சொன்னால்தான் உண்டு. இன்று இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் ராமஜெயம் தரப்பினர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு கோர்ட்டுக்குப் போக வாய்ப்பு உண்டு. அதுமாதிரியான சந்தர்ப்பம் வரும் வரை சி.பி.ஐ. காத்திருக்காது. முன்கூட்டியே அலெர்ட் ஆக சில ரகசிய ஏற்பாடுகளைச் செய்து வைத்திருப்பார்கள். ராமஜெயம் கொலை போன்ற சென்சிட்டிவ் விவகாரம் இந்தியாவில் எங்கு நடந்தாலும், தன்னிச்சையாக சி.பி.ஐ. டீம் களத்தில் இறங்கி முதல் கட்டத் தகவல்களை ரகசியமாகச் சேகரித்து தன்வசம் வைத்துக்கொண்டு உற்றுக் கவனிக்கும். பிற்காலத்தில், சி.பி.ஐ. விசாரிக்கவேண்டிய சூழ்நிலை வந்தால், இந்தத் தகவல் சேகரிப்பு அப்போது கைகொடுக்கும். இதன் ஒரு கட்டமாக, சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி வந்துபோனதாகச் சொல்​கிறார்கள்.''  

''இப்போது விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸுக்கு 'செக்' வைக்கிறது சி.பி.ஐ. என்று அர்த்தமா?''    

''யாம் அறியோம் பராபரமே! இன்றையக் கால​கட்டத்தில் போலீஸ் துப்புத்துலக்க நம்பும் ஒரே ஒரு ஆயுதம்தான். அது எது என்று சொல்லும் பார்ப்போம்?'' என்று கழுகார் புதிர் போட்டார். யோசித்து உதட்டைப் பிதுக்கினோம்.

''செல்போன்தான். ராமஜெயத்தின் மனைவி லதா, சம்பவம் நடந்த அன்று காலை யதேச்சையாக கணவர் செல்போனுக்குத் தொடர்புகொள்ள... மறுமுனையில், கொலையாளி ஏதோ பேசினான். அந்த சில நொடிகளில் புத்திசாலித்தனமாக ஒரு சத்தத்தைக் கவனித்து போலீஸிடம் சொல்லி விட்டார். அவன் பேசும்போது, ராட்சத ஜெனரேட்​டரின் 'படபட' சத்தம் பின்னணியில் கேட்டிருக்கிறது. அந்த சமயத்தில் எங்கே அந்த ஜெனரேட்டர் இயங்கியது என்று தேடினர். செல்போன் டிராக்கும் கைகொடுக்க... காவிரிக் கரையின் ஒரு பகுதியில் அந்த ஜெனரேட்டரையும், வேறு சில துப்புகளையும் சேகரித்து விட்டனர். ஆக, எலக்ட்ரானிக் எவிடென்ஸை வைத்துத்தான் போலீ​ஸார் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை நெருங்குகிறார்கள்.''

''ராமஜெயம் கொலையிலும் செல்போன் துப்புதான் கொலையாளியைப் பிடிக்கப்​போகிறதா?''

''திருச்சியில் குறிப்பிட்ட ஏரியாவில் போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு செல்போன் சிம் கார்டுகளை மர்ம நபர்களுக்குக் கொடுத்த ஏழு கடைக்காரர்கள் இப்போது போலீஸ் பிடியில். சி.பி.சி.ஐ.டி-யின் திருச்சி ஆபீஸில் இவர்களுக்குத் தினமும் மண்டகப்படி போடப்படுகிறது. டி.எஸ்.பி-யான மலைச்சாமி இந்த ரூட்டில் நூல் பிடித்து கூலிப்படையை நோக்கிப் பயணிக்கிறாராம்.''  

''பயணிக்கட்டும். புது வருடத்திலாவது குற்றவாளி​யைப் பிடித்த சேதியைச் சொல்லட்டும்.''

''ரேஷன் கடைகளில் எடையாளர் மற்றும் விற்பனையாளர் வேலையைக் கூவிக்கூவி விற் பதாகத் தகவல் பரவி உள்ளது. பணத்துடன் ஆளும் கட்சியில் உறுப்பினராக இருப்பதற்கான, அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண் டுமாம். அவர்களுக்குத்தான் வேலை என்று கூறி தமிழ்நாடு முழுவதும் வசூல் வேட்டை நடக்கிறது. ஒரு பக்கம் இந்தப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வும் விறுவிறுப்பாக நடக்கிறது. கடந்த திங்கள்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை நடக்கும் நேர்முகத் தேர்வு, வழக்கம்போல் கண் துடைப்புத்தான் என்ற தகவலும் பரவி இருக்கிறது. இதனால், மாற்றுக் கட்சிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத இளைஞர்களும் விரக்தியில் உள்ளனர். இவர்களில் பலர், உறுப்பினர் அட்டை ஏற்பாடு செய்து தரச்சொல்லி அந்தந்தப் பகுதி ஆளும் கட்சிப் பிரமுகர்களை அணுகுகிறார்கள். அது மட்டும் சாதாரணமாக கிடைத்து விடுமா? அதற்கும் தனி ரேட்டாம்'' என்றபடி பறந்தார் கழுகார்!

படங்கள்: வீ.நாகமணி,

இரா.மூகாம்பிகை

 மத்திய அரசு விழாவில் திடீர் ஜெ.!

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?

மத்திய அரசு விழாக்களில் ஜெயலலிதா கலந்துகொள்வது அரி தாகத்தான் நடக்கும். காவிரி, முல்லைப் பெரியாறு, மின்சாரம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசோடு முட்டிக்கொண்டு இருக்கும் நிலையில் திடீரென, துரந்தோ ரயில்களை ஜெயலலிதா தொடங்கி வைத்ததை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் விளம் பரங்கள் செய்யப்படவில்லை. அழைப்பிதழில் எம்.பி-க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், வசந்தி ஸ்டான்லி, எஸ்.அமீர்அலி ஜின்னா, ரபி பெர்னார்ட், பாலகங்கா, டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி பெயரும் இருந்தது. ஜெயலலிதா வருகையால் எதிர்க்கட்சியினர் ஆப் சென்ட். இந்த விழா நடந்த பிளாட்பாரத்துக்கே ஜெயலலிதாவின் கார் வந்தது. வழக்கமாக ரயில் இன்ஜினுக்கு முன்பாகத்தான் மேடை அமைப்பார்கள். ஆனால் இந்த விழாவில், கடைசிப் பெட்டிக்கு அருகில் மேடை இருக்க... வண்டியின் பின்பக்கம் நின்றபடி ஜெ. கொடி அசைக்க வண்டி புறப்பட்டுச் சென்றது!

 சம்பத்தும் பாடிகாட் முனீஸ்வரரும்!

முகாம் மாறிய நாஞ்சில் சம்பத் போயஸ் கார்டனில் ஐக்கியமான பிறகு, ம.தி.மு.க-வில் இருந்து சிலரை அழைத்துவந்து அ.தி.மு.க-வில் சேர்த்தார். அந்த விழாவில் நாஞ்சில் சம்பத்துக்கு இனோவா காரை வழங்கினார் ஜெய லலிதா. அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக்கார் புறப்பட்டுப் போன இடம் பாடிகாட் முனீஸ்வரர் கோயில். சென்ட்ரல் அருகே இருக்கும் இந்தக் கோயிலில்தான் புதிய வண்டிகளுக்குப் பூஜை போடுவார்கள்!

 மீண்டும் இந்தி விவாதம்!

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே உள்ளது. 1963-ல் இதற்காகப் போடப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 22 மொழிகளைப் புதிதாகச் சேர்த்து ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார் தி.மு.க. எம்.பி-யான திருச்சி சிவா. இதற்காகத் தனிநபர் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ளார். இது விவாதத்துக்கு வரும்போது, மீண்டும் மொழிப்பிரச்னை பரபரப்பு கிளம்பலாம்!

 அரசு ஆதரவு விழாவில் குஷ்பு?

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?

சென்னையில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கி இருக்கிறது. இந்த விழாவை செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். அடுத்த நாள், ராணி சீதை ஹாலில் நடந்த இந்தத் திரைப்பட விழாவின் இன்னொரு நிகழ்ச்சியை நடிகை குஷ்பு ரிப்பன் வெட்டித் தொடங்கினார். முதல்வர் கையில் 50 லட்சத்தை வாங்கிவிட்டு தி.மு.க-வைச் சேர்ந்த குஷ்புவை வைத்து, அதே விழாவை இன் னொரு பக்கம் நடத்தியதை மேலிடத்துக்குப் புகாராகத் தட்டி விட்டனர். 50 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்ததில் சரத்குமாருக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த நிதியை முதல்வரிடம் இருந்து வாங்கியபோது சுஹாசினி இருந்தார். குஷ்பு ரிப்பன் வெட்டியபோதும் பக்கத்தில் அவர்தான் நின்றார்.

மிஸ்டர் கழுகு: ஆளும் கட்சியினருக்கு அரசு வேலை ரெடி?