Published:Updated:

மோடி பிரதமராக வேண்டி தே.மு.தி.க. தொண்டர்கள் மொட்டை!

Vikatan Correspondent
மோடி பிரதமராக வேண்டி தே.மு.தி.க. தொண்டர்கள் மொட்டை!
மோடி பிரதமராக வேண்டி தே.மு.தி.க. தொண்டர்கள் மொட்டை!

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட உமாசங்கர் வெற்றி பெற வேண்டியும், மோடி பிரதமர் ஆகவேண்டியும் தே.மு.தி.க. தொண்டர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர்.

மோடி பிரதமராக வேண்டி தே.மு.தி.க. தொண்டர்கள் மொட்டை!

தமிழகத்தில், கடந்த மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் முத்தையனும், அ.தி.மு.க. சார்பில் ராஜேந்திரனும், தே.மு.தி.க. சார்பில் உமா சங்கரும் போட்டியிட்டனர். இதில், உமா சங்கருக்கும், ராஜேந்தரனுக்கும் பலத்த போட்டி இருந்தது.

மோடி பிரதமராக வேண்டி தே.மு.தி.க. தொண்டர்கள் மொட்டை!

இந்நிலையில், உமா சங்கர் வெற்றி பெற வேண்டியும், நரேந்திர மோடி பிரதமராக வேண்டியும், தே.மு.தி.க. நகர செயலாளர் நரசிம்ம பாபு தலைமையில் அக்கட்சியின் தொண்டர்கள் 10 பேர் விழுப்புரம், வீரமாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டனர்.

ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்