Published:Updated:

மே 11: பாப் மார்லி எனும் இசைப்போராளி மறைந்த தினம் சிறப்பு பகிர்வு.

மே 11: பாப் மார்லி எனும் இசைப்போராளி மறைந்த தினம் சிறப்பு பகிர்வு.
மே 11: பாப் மார்லி எனும் இசைப்போராளி மறைந்த தினம் சிறப்பு பகிர்வு.

அப்பா ஆங்கிலேயர் அம்மா ஜமைக்கா பகுதியில் வாழ்ந்த ஆப்ரிக்கர் .உலகம் முழுக்க அப்பா சுற்றிக்கொண்டே இருந்தவர் . அவரை அரிதிலும் அரிதாகத்தான் பார்த்தார் ; பத்து வயதாகும் பொழுது தந்தை இறந்தே போனார் .

அம்மா எவ்வளவோ கடினப்பட்டு படிக்க வைத்தார் .இவரின் நாட்டமோ இசைமீது போனது. ஜமைக்காவில் கறுப்பின மக்கள் சரியாக நடத்தப்படாத காலம் அது ; ரப்பர்தோட்டங்களில் மிகவும் இன்னல்களுக்கு வெள்ளையர்களால் உள்ளாக்கப்பட்டார்கள் . மார்லி தெருவோரம்,கடைநிலை மக்கள் வாழும் இடங்களில் ஒலித்த ரெகே இசையை விரும்பி கற்றார் ,தன் இசையால் பிரபலம் ஆனார் ;ஆனால் ராயல்டி தராமல் ஏமாற்றிய பொழுது ப்ளாக்வெல் எனும் வெள்ளையரோடு சேர்ந்து கொண்டார் ;ஒழுங்காக பணம் வர ஆரம்பித்தது .

மே 11: பாப் மார்லி எனும் இசைப்போராளி மறைந்த தினம் சிறப்பு பகிர்வு.

அவரின் இசை மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் குரலாக ஒலித்தது ;ரப்பர் தொழிலாளிகளின் கண்ணீரை வடித்தார் ;எளிய மக்களின் இசையாக பார்க்கப்பட்ட ரெகே இசை இவரால் உலகம் முழுக்க பிரபலம் ஆனது. இவரின் இசைக்கோர்வைகள் மூன்றாம் உலக நாடுகளின் முதல் பாப் நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை இவருக்கு வழங்கியது

நாடு முழுக்க வன்முறை சூழல் நிறைந்திருந்த பொழுது அன்பு செய்யுங்கள் என்று அறிவுரை சொல்வதாக இவரின் பாடல்கள் இருந்தன. 'அன்பினால் ஒரே உலகம் செய்வோம் !' என்கிற தொனிப்பொருளில் பாடல்கள் இவரால் இயற்றப்பட்டன ."கோபம் குறை ! போர்களில் வலிமை பெறு !" என்று அவரின் கீதங்கள் அறிவுறுத்தின.

இவர் அமெரிக்கா போன பொழுது இசை நிகழ்வை ஒரு நாடகத்தோடு நடத்த கூப்பிட்டவர்கள் இவரின் இசை நிகழ்வு நாடகத்தை விட ஹிட் ஆனதால் பாதியிலேயே வெளியேற்றினார்கள் . காசில்லாமல் நடுத்தெருவில் நின்றவர் தப்பித்து நாடுவந்து சேர்ந்தார் .

பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அவர் ; பலநாள் தன் வளர்ந்த அழுக்கு நிறைந்த சாலையில் படுத்து இதுதான் ஏகாந்தம் என பூரிப்பார் . இறப்பதற்கு முன்னர் தன் மகனிடம் ,"பணத்தால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது !" என்று சொன்னார். அவரின் மறைவுக்குப்பின் அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருதை அமெரிக்கா வழங்கியது ; அவரின் பாடல் மற்றும் ஆல்பங்கள் நூற்றாண்டின் மில்லினியத்தின் சிறந்த இசைக்கொர்வைகளாக வெள்ளையர்களின் பத்திரிக்கைகளால் கொண்டாடப்படுகின்றன .

போரிட்டுக்கொண்டு இருந்த ஜமைக்காவின் குழுக்களுக்கு இடையே அமைதியை உண்டு செய்ய ஸ்மைல் ஜமைக்கா எனும் இசை நிகழ்வை நடத்தப்போக அது உயிருக்கே ஆபத்தானது .விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய குழு இவரையும் மனைவியையும் தாக்க இசை நிகழ்வு நடக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்டோடு வந்தார் மனிதர் ;பாடினார்.80,000 பேர் திரண்டார்கள் ...

ஸ்மைல் ஜமைக்கா இசைநிகழ்வின் பொழுது "நீங்கள் உயிருக்கு பயப்படவில்லையா ?"எனக்கட்டுகளோடு வந்த இவரை கேட்ட பொழுது "உலகத்துக்கு தீமை செய்பவர்களே பயப்படாத பொழுது இந்த உலகை அன்பால் நிறைக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும் ?"எனக்கேட்டார்.அதுதான் மார்லி

அவரின் Get up, stand up பாடலின் மொழிபெயர்ப்பு உங்களுக்காக :

எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
போதிக்கும் ஆசாமியே ! சொர்க்கம் பூமிக்கடியில் என்று சொல்லாதே எங்களிடம் !
வாழ்க்கையின் அர்த்தம் உனக்கு தெரியாது
என நான் அறிவேன்
தகதகப்பது எல்லாம் தங்கமில்லை அல்லவா ?

பாதிக்கதை எப்பொழுதும் பாடப்படுவதே இல்லை
இப்பொழுது தெரிகிறதில்லையா வெளிச்சம் ?உன் உரிமைக்காக எழுந்து நில் ! துணிந்து வா

எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு,வாழ்க்கை உன் உரிமை
ஆகவே,போரிடுவதை நிறுத்திட முடியாது !
உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
இறைவா இறைவா
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு போரை தொடர்ந்து நிகழ்த்து
போராடுவதை நிறுத்தாதே

உங்கள் இசங்களும்,போலி ஆட்டங்களும் எங்களுக்கு அலுத்துவிட்டன
இறந்திடு,சொர்க்கத்துக்கு கர்த்தரின் பெயரால் சென்றிடு,இறைவா
எங்களுக்கு புரியும் பொழுது எங்களுக்கு தெரியும்
எல்லாம்ன் வல்ல இறைவன் வாழும் மனிதன்
சிலரை சில நேரம் ஏமாற்றலாம்
எல்லாரும் எல்லா கணங்களிலும் ஏமாற மாட்டார்கள்
ஆகவே பேரொளியை பாருங்கள்
நாம் நம்மின் உரிமைக்காக உறுதியாக நிமிர்ந்து நின்றிடுவோம்

ஆகவே நீ எழுந்திடு,நின்றிடு,உன் உரிமைக்காக நிமிர்ந்து நின்றிடு
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே
எழுந்திடு நின்றிடு ,நிமிர்ந்து நில் உன் உரிமைக்காக !
எழுந்திடு,நிமிர்ந்து நின்றிடு ,போரிடத்துவண்டிடாதே

- பூ.கொ.சரவணன்