Published:Updated:

நெல்லை மாவட்டத்தில் பா.ம.க. கலைப்பா?

கிடுகிடு திருப்பங்கள்!

நெல்லை மாவட்டத்தில் பா.ம.க. கலைப்பா?

கிடுகிடு திருப்பங்கள்!

Published:Updated:
##~##

'பா.ம.க-வை வன்னியர் சங்கம் போலவே நடத்துகிறார் ராம​தாஸ். சாதி உணர்வுடன் செயல்படும் அவர் மாற்று சமூகத்தினரைக் கொஞ்சமும் மதிப்பதே இல்லை. இனியும் அவருடன் இணைந்து செயல்படுவதில் அர்த்தம் இல்லை என்பதால், கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்’ - இப்படி ஓர் அறிவிப்போடு நெல்லை மேற்கு மாவட்ட பா.ம.க. கூண்டோடு கலைக்கப்பட்டு இருக்​கிறது. 

அடுத்ததாகக் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளையும் ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து தி.மு.க-வுக்குச் செல்லத் திட் டமிட்டு இருக்கிறார், பா.ம.க-வின் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஆறுமுகப்பெருமாள். 27-ம் தேதி தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்துக்கு ஸ்டாலின் வரும்போது இணைவதாகத் திட்டமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறுமுகப்பெருமாளிடம் பேசினோம். ''நான் 1990 முதல் பாட்டாளி மக்கள் கட்சியில் பல

நெல்லை மாவட்டத்தில் பா.ம.க. கலைப்பா?

பொறுப்புகளை வகித்து மாவட்டச் செயலாளர் ஆனேன். பெரியார் கொள்கைகளில் மிகவும் உறுதியுடன் இருப்பதாகச் சொல்லியே டாக்டர் ராமதாஸ் எங்களை ஏமாற்றி விட்டார். சமீப கால​மாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே அவர் செயல்பட்டு வருகிறார். மாமல்லபுரத்தில் நடந்த மாநாட்டில் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக்கொண்டே காடுவெட்டி குரு தாழ்த்தப்பட்ட மக்களைக் கடுமையாகச் சாடினார். அதை, ராமதாஸ் கண்டு​கொள்ளவே இல்லை.

தர்மபுரி கலவரத்தில் அப்பாவி தலித்துகள் வீடுகள் எரிக்கப்பட்டதையும் அவர்களின் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதையும் கண்டிக்காமல் அந்தச் சம்பவத்தை

நெல்லை மாவட்டத்தில் பா.ம.க. கலைப்பா?

நியாயப்படுத்தும் வகையிலும் பேசுகிறார். 52 சாதித் தலைவர்களை அழைத்துப் பேசி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் அளவுக்கு அவருடைய சாதிய உணர்வு இருக்கிறது.

அதனால்தான் சமீபத்தில் அவர் நடத்திய டாஸ்மாக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். நெல்லை மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரை நான் உட்பட மாவட்டத் தலைவர் அருணாசலம், பொருளாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 29 நிர்வாகிகளும் தொண்டர்களும் பா.ம.க-வில் இருந்து விலகி விட்டோம்.

இதுதவிர சேரன்மகாதேவி, அம்பா​சமுத்திரம், பாப்பாகுடி, ஆலங்குளம், கீழப்பாவூர் ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர். இனி, இந்தப் பகுதியில் பா.ம.க. என்பதே இருக்காது'' என்றார் காட் டமாக.

இதுகுறித்து, பா.ம.க-வின் துணைத் தலை​வரான மோகன்ராஜிடம் பேசினோம். ''மேற்கு மாவட்டச் செயலாளர் ஆறுமுகப்​பெருமாள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். கட்சியைப் பொறுத்தவரை எந்தத் தனி நபரையும் நம்பி இல்லை. பொறுப்பில் இருப்பவர்கள் வருவார்கள், போவார்கள். அதற்காகத் தொண்டர்கள் எல்லோருமே நமக்குப் பின்னால் இருக்கிறார்கள் என நினைத்துக் கொள்வதா?'' என்றார் காட்டமாக.

ராமதாஸின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்ற கட்சி​களை மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளேயே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்