Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

கலைப்பிரியன், நாமக்கல்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கருணாநிதி ஆந்திராவைச் சேர்ந்தவர்’ என்று அன்புமணி கூறுகிறாரே?

பெரியார் கன்னடர். அண்ணாவும் கருணாநிதியும் தெலுங்கர்கள். எம்.ஜி.ஆர். மலையாளி. ஜெயலலிதா கன்னடர்... என்று விமர்சிப்பதைவிட அவர்களின் செயல்பாடு சார்ந்து குற்றம் காண்பதே சரியானது. இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வாளர் கோ.கேசவன் தனது புத்தகத்தில் நிறைய உதாரணங்​களை அடுக்கி உள்ளார்.

கழுகார் பதில்கள்!
##~##

'பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்த ரெசிஸ்டேப்ரா, தென் அமெரிக்க நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் இருந்தார். அர்ஜென்டினாவைச் சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா, கியூபாவின் தேசியப் புரட்சியில் நேர்மையாகப் பங்களித்தார். ஆங்கிலேயராகப் பிறந்தாலும் கிறிஸ்டோபர் கால்டுவெல், பாசி​ஸத்​துக்கு எதிரான ஸ்பானிய உள்நாட்​டுப் போரில் முனைப்பான ஈடுபாடு​கொண்டு மரணம் அடைந்தார். வங்காளத் தேசிய இனத்தைச் சேர்ந்த எம்.என்.ராய், மெக்ஸிகோ பொதுவு​டைமை இயக் கத்தைத் தோற்றுவித்துத் தலைமை வகித்தார். ஆப்கானியரான அமீர் ஹைதர்​கான் சென்னை மாகாணத்தில் தலைமறைவுப் பொதுவுடைமைக் குழுவைக் கூட்டினார். கன்னட தேசிய இனத்தவரான சீனிவாச ராவ் தமிழ்த் தேசிய இனக்கூலி விவசாயப் பறையர்களின் மீதான பொருளாதார, பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். இவற்றுக்கு எல்லாம் தேவை, 'ஜனநாயகத்துக்காகத் தொடர்ந்து போராடும் அரசியலை ஏற்றுக்கொள்ளுதலாகும். அதை முனைப்பாக நடைமுறைப்படுத்துதலும் ஆகும்’ என்று குறிப்பிடுகிறார். உயிரைப் பணயம் வைத்து ஆண்டன் பாலசிங்கத்துடன் வாழ்ந்த அடேல் பாலசிங்கம் ஒரு தமிழ்ப் பெண் அல்ல. நடேச​னுக்கு முன்னால் வெள்ளைக் கொடி தாங்கி சரண​டைய வந்து, சிங்களத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அவரது மனைவி ஒரு சிங்களப் பெண். இதெல்லாம் இருக்கட்டும்... 'ஆந்திராக்​காரரான கருணாநிதி கொடுக்கும் ஏழு எம்.பி. ஸீட் நமக்கு எதற்கு?’ என்று அன்றே அப்பாவுக்கு உறைக்கும்​படி சொல்லி இருக்கலாமே அன்பு மகன் அன்புமணி?

 வாசுதேவன், மும்பை.

கழுகார் பதில்கள்!

அரசியலில் ஈடுபடுபவர்களின் எதிர்காலக் கனவு என்னவாக இருக்கும்?

பணம் சம்பாதிப்பதும் பதவியைப் பிடிப்பதும்தானே இன்றைய கனவு. பழுத்த மரங்களை நோக்கி பறவைகள் வருவதற்கு எது காரணமோ, அதுதான் அரசியலுக்கும் பொருந்தும். தகுதி இல்லாத பலர், பதவிகளைப் பிடித்திருப்பதையும், பணக்காரர்களாக மாறுவதையும் பார்ப்பவர்களுக்கு 'அவனே பெரிய ஆளா ஆயிட்டான். நமக்கு மட்டும் என்ன குறைச்சல்?’ என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது. இத்தகையப் போட்டியும் பொறாமையும்தான் பலரை உள்ளே இழுக்கிறது. வந்ததும் தாராளமாகச் செலவு செய்கிறார்கள், அப்புறம் முதலுடன் சேர்த்து லாபத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு இதுவும் ஒரு வியாபாரம் தான்.

 பி.சாந்தா, மதுரை-14.

கழுகார் பதில்கள்!

'அவதூறு வழக்கு வந்துவிடப் போகிறது’ என்று விஜயகாந்த் மீது கருணாநிதி கரிசனப்பட்டு உள்ளாரே?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தூண்டில் இது. எதிரிகளை ஒன்றுசேர்ப்பதற்கு மட்டும்தான் இத்தகைய வழக்குகள் பயன்படும் என்பதை இனியாவது ஜெயலலிதா உணர வேண்டும்.

 வி.பி.நாதன், சென்னை-87.

கழுகார் பதில்கள்!

சாதி இந்துக்கள் என்பவர்கள் யார்? தலித் என்பவர்கள் யார்? ஆதி திராவிடர்கள் என்பவர்கள் யார்?

சாதி இந்துக்கள் என்பது பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களின் வார்த்தை. பிராமணர்களை மத இந்துக்கள் என்றும் மற்றவர்களை சாதி இந்துக்கள் என்று அடையாளப்படுத்தி எழுதினர்.

'தலித்’ என்ற மராத்திச் சொல்லுக்கு  அடக்கப் பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம். தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று 'தலித்’ என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட இன மக்களை 'ஆதி திராவிடர்கள்’ என்று அடையாளப்படுத்துவது, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. எம்.சி.ராஜா, இதற்காகப் போராடினார்.

 வத்சலா மைந்தன், சென்னை.

கழுகார் பதில்கள்!

'எனக்குத் துரோகம் இழைத்தவர்களை இயற்கை பார்த்துக் கொள்ளும்’ என்று சவால் விட்டுள்ளாரே அழகிரி?

இப்படி எத்தனையோ சவால்களை விட்டுள்ளார். எனவே, இதில் அதிர்ச்சியடைய எதுவும் இல்லை. நம்முடைய வருத்தம் எல்லாம் ஒரு கல்யாண வீட்டில் போய் அபசகுனமாகப் பேச வேண்டுமா என்பதுதான். இதைப் பேசத்தான் தெருமுனை இருக்கிறதே.

 நாசரேத் விஜய், கோவை-6.

கழுகார் பதில்கள்!

கச்சத்தீவை கைப்பற்றும் வாய்ப்போ, வழியோ இருக்​கிறதா?

கர்நாடகாவிடம் இருந்து 10 டி.எம்.சி. தண்​ணீர் வாங்கு​​வதற்குத் திராணி இல்லை. இதில் கச்சத்​தீவாவது... மிச்சத் தீவாவது!

மாநாடுகளிலோ, பொதுக்குழு, செயற்குழுவிலோ போடும் தீர்மானத்தின் எண்ணிக்கை ஒன்று கூடும். அதைத்தவிர எந்தப் பலனும் இல்லை கச்சத் தீவால்.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

கழுகார் பதில்கள்!

பலம், பலவீனம் - சிறப்பு என்ன?

பலத்தை அறியாததே பலவீனம்!

பலத்தை அதிகமாக நம்புவதும் பலவீனம்!

பலவீனத்தை உணர்ந்திருப்பதே பெரும்பலம்!

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

எம்.ஜி.ஆர் நினைவிட வளைவு அவசரமாகத் திறக்கப்பட்டு உள்ளதே?

கழுகார் பதில்கள்!

அது இரட்டை இலையாக அவர்களுக்குத் தெரிவதினாலேயே அவசர அவசரமாகத் திறக்கப்​பட்டு உள்ளது. இரட்டை இலை இல்லை என்றால், எந்த வழக்குக்கும் எத்தகையத் தீர்ப்புக்கும் பயப்பட வேண்டியது இல்லையே! எதையும் துணிச்சலாகச் செய்வதும், அதன் மீதான விமர்சனங்களுக்குக் கவலைப்படாததுமான முதல்வரின் போக்கு இந்த விஷயத்தில் காணாமல் போய்விட்டது. ஓட்டுப் போடும் யாரைக்​கொண்டுபோய் நிறுத் தினாலும் அவர், 'அட... ரெட்டெல’ என்றுதான் சொல்வார்.

 நெல்லை தேவமைந்தன், மதுரை-2.

கழுகார் பதில்கள்!

தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் பதவி நீட்டிப்பு வழக்குத் தள்ளுபடி ஆகி விட்டதே!

அது நீதிமன்ற விவகாரம். ஆனால், அரசியல் ரீதியாக ஒரு சந்தேகம்.

எல்லாவற்றுக்கும் கருத்துச்சொல்லி சந்தேகக் கேள்வி கேட்கும் கருணாநிதி, ராமானுஜம் விஷயத்தில் அமைதியாகவே இருக்கிறாரே... 'சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி​-யாகவும், உளவுத்துறை டி.ஜி.பி-யாகவும் ஒருவரே இருக்கலாமா? ஓய்வுபெற்று பதவி நீட்டிப்பு பெற்​றவர் இரண்டு பதவிகளில் தொடரலாமா? வேறு அதிகாரிகளே இல்லையா?’ என்று ஏகப்பட்ட கேள்விகளை அவர் ஏன் கேட்கவில்லை?

 உமரி.பொ.கணேசன், மும்பை-37.

கழுகார் பதில்கள்!

ஒருவர் எல்லோருக்கும் நல்லவராக இருப்பது கஷ்டம் தானே?

ஒருவர் எல்லோருக்கும் நல்லவராக எப்படி இருக்க முடியும்? நல்லவருக்கு நல்லவராக இருக்​கலாம். கெட்டவருக்கும் நல்லவராக எப்படி இருக்க முடியும்? எல்லோர்க்கும் நல்லவராக ஒருவர் இருக்கிறார் என்றால், நடிக்கிறார் என்று அர்த்தம். அப்படி நடிப்பது கஷ்டம்தான்.

 ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்-5.

கழுகார் பதில்கள்!

மாயன் காலண்டர்?

இந்த பதிலைப் படிக்கும்போது மாயன் காலண்டர் முடிந்திருக்கும்.

'உலகம் தனது இளமையை இழந்துவிட்டது, முதுமையைத் தொட்டு விட்டது’ - இந்த வாசகம் எழுதப்பட்டு 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், உலகம் இன்னும் இளமையாகத்தானே இருக்கிறது?

கழுகார் பதில்கள்!