Published:Updated:

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு யு.எஸ். உறுதுணைபுரியும்: ஹிலாரி உறுதி

புதுடெல்லி, ஜூலை 19,2011

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு யு.எஸ். உறுதுணைபுரியும்: ஹிலாரி உறுதி

பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில், இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதுணைபுரியும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதியளித்தார். ##~~##

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

அவர் இன்று காலை டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்துதல், பிராந்திய அளவிலான பிரச்னைகள், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என ஹிலாரி உறுதியளித்தார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து சில தினங்களே ஆன நிலையில், அமெரிக்காவின் இந்த உறுதிப்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எஸ்.எம்.கிருஷ்ணா உடன் பேசுவதற்கு முன்பு ஹிலாரி கூறுகையில், "தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். உள்நாட்டுப் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இரு தரப்பு உறவு மேம்படுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்," என்றார் அவர்.