Published:Updated:

காங்கிரஸ் தோல்வியடைந்தால் ராகுல் காரணம் இல்லை: சகில் அகமது

காங்கிரஸ் தோல்வியடைந்தால் ராகுல் காரணம் இல்லை: சகில் அகமது
காங்கிரஸ் தோல்வியடைந்தால் ராகுல் காரணம் இல்லை: சகில் அகமது
காங்கிரஸ் தோல்வியடைந்தால் ராகுல் காரணம் இல்லை: சகில் அகமது

புதுடெல்லி: தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தால் அதற்கு ராகுல் காந்தி காரணம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சகில் அகமது கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மையக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ராகுல் காந்தி நாட்டை ஆளவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவரும்தான் பொறுப்பு என்று தெரிவித்துள்ள சகில் அகமது, கருத்துக்கணிப்புகளை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்றும், கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காட்டியுள்ளதாகவும் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்த பின்னரே முடிவுகள் எடுப்பதாகவும் சகீல் அகமது குற்றம்சாட்டினார்.