Published:Updated:

விடைபெற்றார் மன்மோகன் சிங்; அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

விடைபெற்றார் மன்மோகன் சிங்; அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
விடைபெற்றார் மன்மோகன் சிங்; அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
விடைபெற்றார் மன்மோகன் சிங்; அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

புதுடெல்லி: பிரதமர் பதவியிலிருந்து இன்னும் சில தினங்களில் விலக உள்ள மன்மோகன்சிங், இன்று தம்முடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பிரியா விடைபெற்றார். இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கியது.

81 வயதான மன்மோகன் சிங் இந்தியாவின் 13வது பிரதமராக கடந்த 10 ஆண்டுகாலமாக பதவி வகித்து வருகிறார். வரும் 16ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், இன்று அவர் தம்முடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து அவர்களிடம் நன்றி கூறி விடைபெற்றார்.

இதனைத் தொடர்ந்து தமது ஆட்சி காலத்தின் இறுதி அமைச்சரவை கூட்டத்தை மன்மோகன் சிங் தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் மருந்துத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக விவாதித்து அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா சிறப்பு விருந்து

இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை சிறப்பு விருந்து அளிக்கிறார். அப்போது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் , மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட நினைவுப் பொருள் ஒன்றும் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.