Published:Updated:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி: பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதி்க்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சில சொத்துகளுக்கு உரிமை கோரி லெக்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனிடையே, லெக்ஸ் நிறுவன வழக்கு முடியும் வரை சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்ககோரி ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.