கழுகார் நுழையும்போது ஒளிபாய்ச்சும் கேமராக்கள் நம் அலுவலகத்தைச் சூழ்ந்திருந்தன! ''என்ன விசேஷம்?'' என்று சிரித்தார் கழுகார்.

''ஆனந்த விகடன் தனது 85-வது ஆண்டு கொண்டாட்டத்தில் இருக்கிறது. விகடன்

. இதழுடன் கோவை, திருச்சி, மதுரை, புதுவை, சென்னை என மண்டலவாரியான இணைப்புப் புத்தகங்களை இனி வழங்கப் போகிறார்கள். அதற்கான ஒரு உற்சாக ஷூட்டிங் இது!'' என்று விவரித்தோம்..
''நூற்றாண்டைக் கடந்தும் வளர வாழ்த்துகள்!'' என்று பாராட்டுகளைப் பதிவு செய்த கழுகார், செய்திக் களத்துக்குள் குதித்தார்.

''ஞாயிற்றுக் கிழமை அன்று காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு உறுப்பினர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கூடி, பிரமுகர்களின் கருத்தைக் கேட்டார்கள். ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் என்று சபையில் வைத்து ஸீட் நம்பர் பற்றி பேசியதை தி.மு.க. தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லையாம். நைஸாக தங்கபாலுவிடம் டி.ஆர்.பாலுவைப் பேசச் சொன்னாராம் கருணாநிதி. 'உங்க கலந்துரையாடலை முடித்துக்கொண்டு கோபாலபுரம் வந்து தலைவரைச் சந்தித்துவிட்டுச் சென்றால், பேச்சுவார்த்தைக்கு பிள்ளையார்சுழி போட்ட மாதிரி ஆகுமே’ என்று பாலு சொல்ல... அதை தங்கபாலு தலை ஆட்டி ஏற்க... விஷயம் மெள்ள ப.சி-க்குச் சொல்லப்பட்டது. 'அதுக்கென்ன, முதல்வரைச் சந்திக்கலாமே’ என்று அவரும் சொன்னார். ஜி.கே.வாசனும் ஜெயந்தியும்தான் கொஞ்சம் இழுத்திருக்கிறார்கள். 'நம்மிடம் கருத்துச் சொல்ல தமிழ்நாடு முழுவதும் இருந்து முக்கியஸ்தர்கள் வந்திருக்கும்போது, அவர்களைக் காக்க வைத்துவிட்டு, கருணாநிதியைப் பார்க்கப் போவது சரியானதா?’ என்று இவர்கள் காரணம் சொல்ல... அதற்குள் 'மாலை 4.30-க்கு உங்களைச் சந்திக்க முதல்வர் நேரம் ஒதுக்கிவிட்டார்’ என்ற தகவலும் வந்து சேர்ந்தது.''

''கதர் கட்சியை கதிர் கட்சி கட்டுப்படுத்துகிறதா என்ன?''

''சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் குழுமினார்கள் என்ற செய்தியை விட 'காங்கிரஸ் குழு கருணாநிதியைச் சந்தித்தது’ என்பதே தலைப்புச் செய்தியாக வரும். இதற்கு நம்முடைய தலைவர்கள் வலியப் போய் வழிவகுக்க வேண்டுமா? என்று பவனில் நின்றுகொண்டு பலரும் வெளிப்படையாகவே விமர்சித்தார்களாம்...''

''அதையும் மீறித்தான் போனார்களே... கோபாலபுரத்தில் என்ன நடந்ததாம்?''

''பரபரப்பாக ஐவர் குழு உள்ளே போய், பளிச்செனச் சிரிக்கும் படத்தை எடுத்ததுமே பாதிக் காரியம்

சக்சஸ் ஆனது. 'என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள்?’ என்று கருணாநிதிதான் ஆரம்பித்திருக்கிறார். மற்றவர்கள் அமைதியாக இருக்க... ஜெயந்தி நடராஜன், 'தொண்டர்களிடம் கேட்ட கருத்தில் எங்களுக்கு ரெண்டுவிதமான அபிப்பிராயம் வந்திருக்கிறது. அதை அப்படியே சோனியா மற்றும் ராகுலிடம் சொல்வோம். அவர்கள்தான் இறுதி முடிவை எடுப்பார்கள்’ என்றாராம். 'ரெண்டுவிதமான அபிப்பிராயங்கள்’ என்ன என்று கருணாநிதியும் கேட்கவில்லை. இவர்களும் சொல்லவில்லை. 'தி.மு.க-வுடன் கூட்டணி இருக்கட்டும். ஆனால் 70 இடங்களுக்கு மேல் வாங்கவேண்டும்’ என்பது ஒரு தரப்பு வாதம். 'காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்பது இன்னொரு தரப்பு சொல்வது. இது குறித்து பேசாமல், 'சோனியாவும் ராகுலும்தான் முடிவெடுப்பார்கள். முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’ என்று 'டிபிகல்' காங்கிரஸ் குரலில் இவர்கள் சொல்லிவிட... பதினைந்து நிமிஷங்களில் சந்திப்புக்கு முற்றும் விழுந்தது!''

''சோனியா, ராகுலுக்கு இந்த சந்திப்பு பற்றி முன்கூட்டி சொன்னார்களாமா?''

''சத்தியமூர்த்தி பவனில் கருத்துக் கேட்பு நடந்துகொண்டு இருந்தபோதே தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜாவுக்கு ராகுல் காந்தியின் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. சில விஷயங்களைச் சொல்லி, 'மதியம் 3 மணிக்கு நீங்கள் பத்திரிகையாளர்களைச் சந்தியுங்கள்’ என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். பாத யாத்திரை புகழ் யுவராஜாவுக்கு இது போதாதா? 'ஆட்சியில் பங்கு வேண்டும். அதைத் தேர்தலுக்கு முன்பே அறிவித்தால் மட்டும்தான் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள்’ என்கிற ரீதியில் அவரது பேட்டி அமைந்திருந்தது.''

''திசைக்கொரு விதமாக காங்கிரஸ் அணுகி இப்படியா தி.மு.க-வை 'கிரஷ்' பண்ணுவது?''

''இதையும் கேளும். சோனியாவின் அரசியல் ஆலோசகர்களில் முக்கியமானவரான அகமது படேல் அனுப்பிய தூதுவர் ஒருவர் சென்னை வந்து விஜயகாந்த்தை சந்தித்ததாகவும்... 'மார்ச் முதல் வாரம் வரை எந்த முடிவையும் நீங்கள் எடுக்க வேண்டாம்.... காங்கிரஸுக்காகக் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனதாகவும் ஒரு குண்டு போடுகிறார்கள் சில கதர் தலைவர்கள். விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் டெல்லியில் முகாமிட்டு வந்திருப்பதையும் தி.மு.க. குழப்பத்தோடு பார்த்து வருகிறது. 'கருணாநிதியுடன் நட்பு இருக்கிற மாதிரியே காலத்தைக் கடத்தி... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முடிந்த அளவுக்கு சி.பி.ஐ-க்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு... அதுவரை தங்களுக்கு எதிராக பதிலுக்குப் பாயாமலும் பார்த்துக்கொண்டு... திடீரென்று கழற்றிவிடும் எண்ணத்தில் இருக்கிறது காங்கிரஸ். அதற்குத்தான் விஜயகாந்த்திடம் தனி டிராக்கில் பேசுகிறார்கள்' என்று கழக எம்.பி. ஒருவரிடம் அலர்ட் மணி அடித்தாராம் டெல்லி இடைத் தரகர் ஒருவர்.''

''விஜயகாந்த் மூட் என்னவாம்?''

''51 இடங்கள் வரை தந்தால் போதும் என்று ஜெ.தரப்புக்கு விஜயகாந்த் சிக்னல் காட்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். 'நாங்க கூடுதலான தொகுதிகள் கேட்கிறது எதுக்குன்னா, எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்துகூட தி.மு.க-வுக்குக் கிடைச்சுடக் கூடாதுன்னுதான்! அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் நாங்கள் ஜெயித்தால் நாங்கள்தானே எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெறுவோம்’ என்று கண் நிறைய கனவோடு பேசுகிறார் தே.மு.தி.க. சீனியர் ஒருவர்!''

''சரிதான்!''

''இதற்கிடையே, விஜயகாந்த் கட்சித் தொண்டர்களை 'காபரா'படுத்தும் விதமாக ஒரு பேச்சும் வேகமாகப் பரவுகிறது. 'விஜயகாந்த்தை தனியாக நிறுத்தி, தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகளைப் பிரிக்க தயாநிதி மாறன் பேசிவிட்டார்... காங்கிரஸும் இந்த திட்டத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறது’ என்பது அந்தப் பேச்சு. இது பண்ருட்டி ராமச்சந்திரன் காதுக்குப் போனதாம். 'வதந்திகள் ஆயிரம் பரவட்டுமே. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றாராம் பண்ருட்டியார்! இதே தகவல் தோட்டத்துக்கும் போனதாம். 'அம்மா - விஜயகாந்த் கூட்டணி வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு சக்திகள் முடிந்த மட்டும் முயல்கின்றன. இதை அம்மாவும் புரிந்து வைத்திருக்கிறார். இருவருமே ஜோசியம், கோயில், பூஜை, யாகம் ஆகியவற்றில் ஊறியவர்கள் என்பதால், நாள் நட்சத்திரம் பார்த்துதான் வெளியில் வருவார்கள்’ என்பது கொங்கு மண்டல இலைத் தலைவர் ஒருவரின் கருத்து!’' என்ற கழுகாருக்கு செல்போனில் ஒரு எஸ்.எம்.எஸ். வந்து விழ....

''அவசர அழைப்பு! வருகிறேன்'' என்றபடி பறந்தடித்துக் கொண்டு எங்கோ புறப்பட்டார்.

அநேகமாக வரும் 17-ம் தேதி ஸ்டாலின் லண்டன் பயணம் இருக்கலாம். தொழில் பேச்சுவார்த்தைகள் என்று அவர் சொல்வதும், மருத்துவச் சிகிச்சைக்காக என்று மற்றவர் சொல்வதும் எப்போதும் போல வாடிக்கை!

வரும் 22-ம் தேதி நாகப்பட்டினம் போய் இறங்கப் போகிறாராம் நடிகர் விஜய். சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் பொதுக்கூட்டத்திலும் பேசுவாராம்!

இடைத்தேர்தல் நடந்த நேரங்களில் இளைஞர்களை ஈர்க்க கிரிக்கெட் போட்டி நடத்திப் பரிசுகளை வாரி வழங்குவது, ஆளும் கட்சியின் டெக்னிக்! அதை இப்போதே மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள். 'கிரிக்கெட் விளையாடத் தெரியுமா?’ என்பதை விட... வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே கிரிக்கெட் அயிட்டங்கள் ஃப்ரீ என்று அள்ளிக் கொடுக்கிறார்கள்!