Published:Updated:

காங். உதவியுடன் மம்தா தலைமையில் மத்திய அரசு: திரிணாமுல் காங்கிரஸ்

காங். உதவியுடன் மம்தா தலைமையில் மத்திய அரசு: திரிணாமுல் காங்கிரஸ்
காங். உதவியுடன் மம்தா தலைமையில் மத்திய அரசு: திரிணாமுல் காங்கிரஸ்
காங். உதவியுடன் மம்தா தலைமையில் மத்திய அரசு: திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தா: காங்கிரஸ் உதவியுடன் மம்தா தலைமையிலான மத்திய அரசை அமைப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு தொலைக்காட்சிகள் தேர்தல் குறித்த கருத்து கணிப்பை வெளியிட்டன.

அதில், பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் 101 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களைப் பொறுத்தவரை மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுல்தான் அகமத், ''நாங்கள் தான் மத்திய அரசை அமைப்போம். மம்தா பானர்ஜி தான் எங்களுடைய பிரதமர் வேட்பாளர். எங்களுடையை மத்திய அரசில் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கொள்ளும்'' எனக் கூறியுள்ளார்.