Published:Updated:

ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங்கை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய ராணுவத் தலைமை தளபதியாக உள்ள பிக்ரம் சிங் ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தலைமை தளபதி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் புதிய தளபதி நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இதையடுத்து, புதிய ராணுவ தலைமை தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதேபோல், அமெரிக்க தனியார் நிறுவனமான கே.கே.ஆர். , இந்திய மருந்து நிறுவன பங்கை வாங்கவும் இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் இந்தியாவுக்கு ரூ.1,400 கோடி முதலீடு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.