Published:Updated:

ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங்கை நியமிக்க, வி.கே.சிங் எதிர்ப்பு!

புதுடெல்லி: புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமிக்க, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று (13ஆம் தேதி) நடந்த கடைசி அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மத்திய அரசால் ராணுவத் தளபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள தல்பீர் சிங் சுஹாக், ராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர். அவருக்கு பதவி உயர்வு வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் 2012ஆம் ஆண்டு பிக்ரம் சிங் ராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின் இந்த தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், புதிய ராணுவத் தளபதியாக தல்பீர் சிங் சுஹாக்கை நியமிக்க மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? யாரை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்டுகிறது'' என்றார்.