Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:

இ.பா.ஹரிராமகிருஷ்ணன், இசையனூர்.

கழுகார் பதில்கள்!

'1996-ல் சிலர் கட்டாயப்படுத்தியதால்தான், சில கருத்துக்களைத் தெரிவித்தேன்’ என்கிறாரே ரஜினி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

கருணாநிதியும் சோவும் பதில் சொல்ல​வேண்டிய கேள்வி இது. மூன்றாவது நபரான மூப்பனார் இன்று இல்லை.

 ஜக்கரியா ஷாநவாஸ், சேலம்.

கழுகார் பதில்கள்!

பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டதற்கும், போலீஸ் இன்று ரவுடிகளைச் சுட்டு வீழ்த்துவதற்கும் வித்தியாசம் உண்டா?

##~##

நிச்சயமாக உண்டு! அது துப்பாக்கி, இது கள்ளத் துப்பாக்கி. இப்போதைய என் கவுன்டர்கள் அனைத்துமே கட்டிவைத்துச் சுடப்பட்டு காட்டில் கொண்டுபோய் போடப் படுகின்றன. ஆனால், அன்று நடந்தவை தங்களின் உயிரைப் பணயம் வைத்து நேரில் நடத்தப்பட்டவை!

அது, விடுதலையை நோக்கமாகக்கொண்டவை. இவை விருப்​பத்தை அடிப்படையாகக் கொண் டவை. அவை மனித விடுதலைக்காகச் செய்யப் பட்டன. இவற்றின் மீது மனித உரிமைக் குற்றச் சாட்டுகள்தான் உண்டு.

 பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்!

சாதி மோதலுக்கு முக்கியக் காரணமாக இருப்பது எது?

போலி கௌரவம்!

ஒவ்வொரு சாதியும் தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் கௌரவம், சில செயல்களின் மூலமாகப் பலியாவதாக நம்புகிறார்​கள். 'நம்ம சாதி கௌரவம் என்னாவது?’ என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இந்த மனரீதியான குணாம்சம்தான், சாதி மோதலுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

 என்.வி.சீனிவாசன், புதுப்பெருங்களத்தூர்.

கழுகார் பதில்கள்!

'ஊழல் புகார்களால் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம்’ என்று ரத்தன் டாடா கூறியுள்ளாரே?

நீரா ராடியா விவகாரத்தை மக்கள் மறந்து​விட்டனர் என்று நினைத்துச் சொல்லி இருப்பார்.

 காந்தி லெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்!

தி.மு.க. செயற்குழு அடிக்கடி கூடுவதன் நோக்கம் என்னவோ?

அரசியல்வாதி தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும் என்பார்கள். இல்லை என்றால் செத்து விட்டார் என்று புதைத்து விடுவார்களாம். செயற்குழு, பொதுக்குழு நடத்துவதன் நோக்கமும் இதுதான். கட்சி செயல்படவே இல்லை என்று பொது மக்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இவை நடத்தப்படுகின்றன. 'செயற்குழு கூடி முடிவு எடுக்கும்’ என்று சொல்லப்பட்டாலும் அறிவிக்கப்படும் தீர்மானங்கள் அதற்கு முன் னாலேயே எழுதப்பட்டுவிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அடிக்கடி அணி மாறும் தலைவர் ஒருவர் கருணாநிதி​யிடம் பேசினார். 'எங்க செயற்குழு கூடி முடிவு எடுக்கும்’ என்று கருணாநிதி சொன் னதும், 'என்னிடமே இதைச் சொல்கிறீர்களா? செயற்குழு, பொதுக்குழு எல்லாம் நாம்தானே’ என்று அவர் கேட்டாராம். மூன்று ஆண் டுகளுக்கு முன் நடந்த இதுதான் யதார்த்தம்.

 கே.கணேஷ், வேலூர்.

கழுகார் பதில்கள்!

'தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளையும், தி.மு.க. கூட்டணியில் இப்போது இல்லாத கட்சிகளையும் ஒன்றிணைத்து, பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் மதச்சார்பற்ற கட்சிகள் ஈடுபட்டால், தி.மு.க. அதை ஊக்கப்படுத்தும்’ என்று கருணாநிதி கூறியுள்ளாரே?

தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, ம.தி.மு.க, பா.ம.க. - ஆகிய கட்சிகளை உள்ளடக்கியதாக தனது கூட்டணி அமைந்தால் நல்லது என்று கருணாநிதி நினைக்கிறார். அதற்கான சமிக்ஞை​தான் இது.

இந்தக் கூட்டணியில் காங்கிரஸை மட்டும் நீக்கிவிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்​டையும் சேர்த்துக் கொள்ளலாமா என்றும் யோசிக்கிறார்.

ஆனால் ஜெயலலிதா, 40 தொகுதியிலும் அ.தி.மு.க-வே நின்று வெற்றி பெறும் என்ற தைரியத்தில் இருக்கிறார். இதைத் தெரிந்து​கொண்டு​தான் கருணாநிதி இப்படிப் பேச ஆரம்பித்து இருக்கிறார்.

 ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர்.

கழுகார் பதில்கள்!

நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவ தில்லையே?

வருகிறார்கள். ஆனால் வளர முடியவில்லை. வளர்ந்தாலும் நிலைக்க முடியவில்லை.

 எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

கழுகார் பதில்கள்!

தேர்தலிலே போட்டியிடாத திராவிடர் கழகத்தில் எதற்கு வாரிசு அரசியல்?

பதவி இல்லையென்றால் என்ன... டிரஸ்ட் இருக்கிறதே.

 ஏ.கே.நாசர், டி.ஆர்.பட்டினம்.

கழுகார் பதில்கள்!

தமிழக அரசின் போக்கில் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?

அவதூறு வழக்குகளில் காட்டும் ஆர்வத்தை, திட்டப் பணிகளில் காட்டலாம். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவதில் தயக்கமும் தடுமாற்றமும் இருக்கிறது. செயற்கையாக உருவாக் கப்பட்ட இந்த பயத்தைப் போக்கினால் மட்டுமே, இந்த அரசாங்கம் செயல்படத் தொடங்கும். ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும் இந்த பிரீத்திங் பீரியட் தொடர்வது நாட்டுக்கு நல்லது அல்ல.

 சொ.ஆகாஷ், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

கழுகார் பார்வையில் 2012 எப்படி இருந்தது?

இந்தியா முழுக்க ஊழல் முறைகேடுகள் வெளிச்சமாய் தெரிந்தன. தமிழகம் இருட்டில் தவித்தது. காங்கிரஸ் கட்சி மூழ்க ஆரம்பித்தது. பி.ஜே.பி-க்கு நம்பிக்கை பிறந்தது. கடந்த ஆண்டு தோற்றுப்போன தி.மு.க. இந்த ஆண்டு சோம்பலை முறித்துக் கொண்டது. ஆனால், அ.தி.மு.க-வுக்கு ஏனோ உற்சாகமே இல்லை.

இந்த ஆண்டு மக்கள் போராட்டங்களின் ஆண் டாகவே தொடர்கிறது. ஊழலுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடிய இளைய தலைமுறையினர், இப்போது தலைநகரில் பாலியல் பலாத்காரம், வன்கொடுமை, போலீஸின் அலட்சியம், அதிகார வர்க்கத்தின் கண்துடைப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் திரள்கிறார்கள். இது, இந்திய அரசியலையே மாற்றப் போகும் மகத்தான செயலாக அமையலாம். 2012 கொடுக்கும் மிகப்பெரிய நம்பிக்கை என்றும் இதைச் சொல்லலாம்.

 சம்பத்குமாரி, பொன்மலை.

கழுகார் பதில்கள்!

'எப்போதுமே நான் சி.பி.ஐ-க்குப் பயந்தது இல்லை’ என்று மாயாவதி கூறியிருக்கிறாரே?

கழுகார் பதில்கள்!

காப்பாற்றுவதற்கு மன்மோகன், சோனியா இருக்கும்​​போது ஏன் பயப்பட வேண்டும்?

ஆட்சியைக் காப்பாற்றுவதற்குத் தேவையான எம்.பி-களை வைத்திருந்தால், சி.பி.ஐ.தானே மாயாவதி​களைப் பார்த்து பயப்பட வேண்டும். 'வலிமை உள்ளவன் வைத்ததே வேதம்’ என்று சும்மாவா சொன்னார்கள்?

 ஆர்.பி.ப்ரியன், மழையூர்.

கழுகார் பதில்கள்!

தமிழக அரசியல்வாதிகள் ஜனவரி முதல் நாள் எந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டால், நாடு நலம் பெறும்?

நாம் சொல்வதை அவர்கள் கேட்கப்​போவது இல்லை. இருந்தாலும், 'தம் மக்கள் நலன் என்று செயல்படும் தலைவர்கள், நாட்டு மக்கள் நலனுக்காகச் செயல்பட்டால் போதும்’.

கழுகார் பதில்கள்!