அதிகபட்சம் ஒரு தொகுதியில் போட்டி... கூட்டணித் தோரணத்தில்

. தங்கள் கொடி... இதுதான் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கின் தமிழக நிலைமை. இதைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நடக்கும் குஸ்திகளைப் பார்த்தால் அடேங்கப்பா..!.
இந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கதிரவன். இவருக்கும் தலைவர் நவமணி, பொருளாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோருக்கும் ஏழாம் பொருத்தம். கடந்த ஏப்ரல் மாதம் பிரச்னை பெரிதானது. ஜெயலலிதாவை சந்திக்கச் செல்லும் குழுவில் போன மகேஸ்வரன் அவரது காலில் விழ... பிரளயம்! 'கட்சியின் பிரதிநிதியாகச் சென்றவர் எப்படி அந்தம்மா காலில் விழலாம்?’ என்று அகில இந்தியப் பொதுச்செயலாளரான பிஸ்வாஸுக்கு புகார் பறந்தது! இந்த விஷயத்தில் மகேஸ்வரனையும்

நவமணியையும் கடந்த மே மாதம் கட்சியை விட்டுக் கட்டம் கட்டினார் கதிரவன். உடனே, 'தி.மு.க-வுடன் தொடர்பில் இருக்கும் கதிரவன் கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கிறார்’ என்று தலைமைக்கு இவர்கள் புகார் அனுப்பினர்!

அதற்குள் கட்சியின் துணைத் தலைவர் பாலகிருஷ்ணனை தலைவராகவும் பொருளாளராக மாயத்தேவர் என்பவரையும் நியமித்தார் கதிரவன். இதை மகேஸ்வரன் தரப்பு ஆட்சேபிக்க... கதிரவனின் நடவடிக்கைக்குத் தற்காலிகத் தடை போட்டார் பிஸ்வாஸ். திடீரென ஜனவரி 25-ம் தேதி மகேஸ்வரனை போயஸ்கார்டனுக்கு வரவழைத்துப் பேசினார் ஜெயலலிதா. 'பொதுச் செயலாளர் இருக்கும் போது இவரை எதற்காக அழைத்தார்?’ என்று ஃபார்வர்ட் பிளாக் வட்டாரம் குழம்பியது!

இதற்கு நடுவில் ஃபார்வர்ட் பிளாக்கின் மத்திய கமிட்டிக் கூட்டம் பிப்ரவரி 7, 8 தேதிகளில் டெல்லியில்

நடந்தது. அதில் தமிழக குஸ்தி நிலவரம் குறித்து என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை! இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி மதுரையில் நவமணியும் மகேஸ்வரனும் தங்களது ஆதரவாளர்களைத் திரட்டிக் கூட்டம் போட்டார்கள். 'தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் கதிரவனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக’ தீர்மானம் போட்டவர்கள், 'உசிலம்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும்’ என்ற அதிரடி தீர்மானத்தையும் அரங்கேற்றினர்.

மகேஸ்வரனிடம் பேசியபோது, ''உசிலம்பட்டி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில்தான் எங்க கட்சியில் அடிதடி நடக்கும். அதற்காகத்தான் அங்கே ஜெயலலிதா மேடத்தை நிற்கச் சொன்னோம். அடுத்த கட்டமாக தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்கு கூடிய சீக்கிரமே ஜெயலலிதா மேடத்தைச் சந்திப்போம்!'' என்றார் தடாலடியாக! கதிரவனோ, ''நவமணியையும் மகேஸ்வரனையும் நீக்கிய மாநில கமிட்டியின் முடிவுக்கு மத்திய கமிட்டி ஒப்புதல் அளித்துவிட்டது. அ.தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு என்னை உள்ளடக்கிய குழுவை நியமித்து, ஜெயலலிதாவுக்கே கடிதம் எழுதியுள்ளார் பிஸ்வாஸ். இது தெரிந்தும், குழப்பம் ஏற்படுத்தவேண்டி, பத்துப் பேரைக் கூட்டி, என்னை நீக்குவதாகத் தீர்மானம் போடுகிறார்கள்...'' என்றார் ஆவேசமாக!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: ஜெ.தான்யராஜு