Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

Published:Updated:
##~##

ண்கள் சிவக்க, அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார்! 

''என்ன வைகுண்ட ஏகாதசியா?'' என்றதும் புன்னகைத்தவர், அதில் இருந்தே மேட்டரை ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களின் பிரார்த்தனை அனைத்துக் கோயில்களிலும் பலமாக இருந்தது. நான் இருந்த இடம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில். முதல்வர் ஜெயலலிதா மங்களகரமாக வந்துசேர்ந்தார். அவருடன் சசிகலா மற்றும் இளவரசி. இப்படி மூன்று பேரும் சேர்ந்து பங்கேற்பது நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது​தான் என்பதால், பக்தியை மீறியதாக இருந்தது இந்த பாலிட்டிக்ஸ்!''

''மூவருமே சேர்ந்துவந்தது முக்கியமான திருப்பம்​தானே!''

''கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸுக்கு முன்புதான் சசிகலாவை அவரது குடும்பத்தினரோடு சேர்த்து கல்தா கொடுத்தார் ஜெயலலிதா. இந்த டிசம்பர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் பார்த்த​சாரதி கோயிலுக்குப் பவ்யமாக அழைத்து வந்திருக்கிறார் அதே ஜெயலலிதா. அதுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இரண்டு மாத இடைவெளியில் கார்டனுக்குள் சசிகலா வந்துவிட்டாலும், அவரை பொது இடங்களுக்கு ஜெயலலிதா அழைத்துச்செல்வது இல்லை. இப்போது அதுவும் மறுபடி தொடங்கி விட்டது.''

''ஓஹோ!''

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

''திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்வது பற்றிய தகவல் போலீஸாருக்கே தாமதமாகத்தான் சொல்லப்​பட்டதாம். முதல் நாள் இரவு 11 மணி வரை முதல்வரின் வருகை பற்றி காவல் துறைக்கும் தெரிய​வில்லை. தரிசனம் செய்யவரும் வி.ஐ.பி-க்கள் பட்டியலில் உயர் நீதிமன்றப் பெண் நீதிபதிகள், அமைச்சர்களின் குடும்பத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் என்று சிலரின் பெயர்கள்தான் இருந்தன. அதன்பிறகு, இரவு 11.30 மணிக்கு மேல்தான் முதலமைச்சரின் வருகை பற்றி கோயில் நிர்வாகத்துக்கும், போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. முன்னதாக அறிவித்​தால், ஏராளமான கட்சிக்காரர்கள் கோயிலில் கூடி​விடுவார்கள், அது பக்தர்களுக்கும் போலீஸுக்கும் பெரிய தொந்தரவாகிவிடும் என்று முதல்வர் நினைத் தாராம். அதனால்தான் ரகசிய ஏற்பாடு. இதன் காரணமாக,

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

அவசர அவசரமாகப் பந்தோபஸ்து வேலைகளைக் கவனித்த போலீஸ்காரர்கள், கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் வெளியே செல்லும் பாதைகள் அனைத்தையும்  மூடிவிட்டனர். இதனால், இரவு 1 மணிக்கு சுவாமியின் விஸ்வரூபத் தரிசனத்தை மட்டும் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்திருந்த பக்தர்களால் வெளியில் செல்ல முடியவில்லை. வேறுவழி இல்லாமல் அவர்களும் அதிகாலை 5 மணி வரை இருந்து சொர்க்க வாசல் திறப்பையும் பார்த்துவிட்டுச் செல்​லும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டனர்.''

''ம்!''  

''அதிகாலை 3.30 மணிக்கு வந்த ஜெயலலிதா கிழக்கு வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த கொடி மரத்தை வணங்கிவிட்டு சுவாமி சன்னிதிக்கு வந்த அவருக்காக, சிறப்பு தீப ஆராதனை செய்யப்பட்டுப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு அரை மணி நேரம் கழித்துப் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதுவரை கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து கிளம்பிச் சென்றார். இனி அடுத்தடுத்த விசிட்களிலும் சசிகலாவைப் பார்க்க முடியும் என்றே யூகிக்க வேண்டி உள்ளது.'' என்ற கழுகார், அடுத்து ப.சிதம்பரம் மேட்டருக்கு வந்தார்...

''சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை முட்டுக்​காடு கரிக்காட்டுக் குப்பம் பகுதியில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான இடப்பிரச்னை பற்றி உமது நிருபர் தொடர்ந்து எழுதிவருகிறார். அதில் ஆளும் கட்சி திடீரென அதிகமான கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரிகள் வந்து அப்புறப்படுத்தினர். நவம்பர் மாதம் அந்தப் பகுதி மீனவர்களை ஒரு கும்பல் மிரட்டிச் சென்றதாக புகார் கிளம்பியது. இப்படி தொடர்ந்து பிரச்னைகள் வருவதால், 'நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஓலை அனுப்பியது. 20-ம் தேதி, கலெக்டர் சித்திரசேனன் தலைமையில் அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் நளினி, கார்த்தி இருவருமே வரவில்லை. கலெக்டரின் மேற்பார்வையில் நிலங்கள் அளக்கப்பட்டன. '27-ம் தேதி​யாவது அவர்கள் ஆஜராக வேண்டும்’ என்று மீண்டும் சம்மன் அனுப்புவதாகச் சொல்லிச் சென்றாராம் கலெக்டர். இவை அனைத்தும் ஆளும் கட்சியின் கட்டளைப்படிதான் நடக்கிற​தாம். 'சிதம்பரத்தை ஏதாவது ஒரு வகையில் சிக்க​வைப்பதற்கான முயற்சி இது’ என்று அவரது ஆதர​வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கேற்பத்தான் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மறுநாள் வந்த மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கடற்கரையின் ஓரத்தில் சர்வே எண். 114-ல் உள்ள ஒன்பது சொகுசு பங்களாவில் ஏழு பங்களாக்களுக்கு சீல் வைத்​தனர். மீதிஉள்ள இரண்டு பங்களாக்கள் பணி நிறை​வடையாமல் இருக்கின்றன என்பதால், அவை சீல் வைக்கப்​படவில்லை. இதையே மீனவ மக்கள் தங்கள் வெற்றியாகப் பார்க்கிறார்கள்.

'விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள பங் களாக்களின் உரிமையாளர்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் நிர்வாகம், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம், கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் ஆகியவை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், நோட்டீஸை உரிமையாளர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். அதனால்தான் சீல் வைத்துள்ளோம். இப்போதும் அவர்கள் தரப்பில் பதில் கொடுக்கவில்லை என்றால், அந்தக் கட்டடங்களை இடிப்பது தவிர வேறு வழி இல்லை’ என்று அரசுத் தரப்பு சொல்கிறது.''

''அங்கு குஷ்புவுக்கு சொந்தமான பங்களா இருப்​பதாகச் சொன்னார்களே?''

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

''குஷ்புவிடம் விசாரித்தேன். 'எனக்கு அந்த இடத்தில் எந்தக் கட்டடமும் கிடையாது. அந்த இடத்தில் எனக்கு பிளாட் மட்டும்தான் இருக்​கிறது. காலிமனைக்கு யாரும் சீல் வைக்க முடியாது’ என்று கிண்டலாகச் சொல்கிறார்.''

''பேசுவதற்கு அவருக்குக் கற்றுத்தர வேண்டுமா என்ன?''

''நீதிபதி மீனாகுமாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். இவர், இப்போது ஆந்திர உயர் நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். நீதிபதி மீனா​குமாரி தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்கும் வரை, இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி எலிப்பி.தர்மாராவ், தலைமை நீதிபதியின் இடத்தில் இருந்து தீர்ப்பு வழங்குவார். தலைமை நீதிபதி இக்பால், உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் போகிறார். அவரது பதவி உயர்வு சிலரது கண்களை உறுத்தியது உண்மை. ஆனால் அதை அவர் திறமையாகச் சமாளித்து​விட்டதாகச் சொல்கிறார்கள்!''

''யாருடைய கண்களுக்கு..?''

''இக்பால் அளித்த தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசி அவரது பதவி உயர்வைத் தடுக்க அரசியல் ரீதியாக ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால், அப்படிப் புகார் சொன்ன தலைவரை  ஜனாதிபதியே சமாதானப்படுத்தியதாகச் சொல் கிறார்கள். அதேபோல், இந்து அமைப்பு ஒன்று மதரீதியாக இந்தப் பிரச்னையில் மூக்கை நுழைத் ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் இருந்ததாம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை, டெல்லியில் இருக்கும் சட்டப் பிரமுகர் ஒருவர் சமாதானம் செய்தாராம். மூன்றாவதாக, இப்போது சென்னையில் பொறுப்புகளில் உள்ளவர்களும்   சில திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், அனைத்தையும் தாண்டிவிட்டார் இக்பால்.''

''அப்படியா?''

''ஜாமீனில் வெளியே வந்த கிரானைட் புள்ளி, 'வெளியில் போனதுமே புதுசா ஒரு வழக்கைப் போட்டுக் கைது பண்ணினாலும் பண்ணுவாங்க... அதனால் என்னுடைய பொருட்கள் எல்லாம் ரெண்டு நாளைக்கு இங்கேயே இருக்கட்டும்’ என்று சொல்லி விட்டுத்தான் வெளியில் வந்தாராம்.''

''ரொம்பத்தான் உஷார்.''

''கிரானைட் புள்ளி இருந்த சிறையில், பா.ம.க. பிரமுகர் ஒருவர் இருந்துள்ளார். அவரிடம் மனம் விட்டுப் பேசினாராம் கிரானைட் புள்ளி.  'எல்லாமே அரசியல்தான் தம்பி! சட்டமன்றத் தேர் தலுக்கு ஒரு கட்சி ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்டது.  'அவங்க ஆட்சிக்கு வர முடியாது, பவர் எங்ககிட்டதான் வரப்போகுது’னு இன்னொரு கட்சி அதைவிட டபுளாக் கேட்டுச்சு. அதை நம்பி, அவங்க கேட்டதைக் குடுத்துட்டு, இவங்களுக்குப் பத்தில் ஒரு பங்கு மட்டும் கொடுத்தேன். அதுதான் இப்ப வினையாப்போச்சு’ என்று நொந்து புலம்பினாராம்'' என்று கண் சிமிட்டியபடி கிளம்பினார் கழுகார்

மிஸ்டர் கழுகு: ஏகாதசி சங்கமம்!

படம்: பா.ஜெயவேல்