Published:Updated:

நாடாளுமன்ற தேர்தல்: தபால் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ.க. முன்னணி!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தல்: தபால் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ.க. முன்னணி!
நாடாளுமன்ற தேர்தல்: தபால் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ.க. முன்னணி!
நாடாளுமன்ற தேர்தல்: தபால் ஓட்டு எண்ணிக்கையில் பா.ஜ.க. முன்னணி!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தபால் ஓட்டுக்களில் பா.ஜ.க. கூட்டணி 178 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

இந்தியாவின் 16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாடுமுழுவதும் ஒன்பது கட்டங்களாக கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் இன்று காலை 8 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

அதன்படி தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேசிய அளவில் பா.ஜ.க. கூட்டணி 1783 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளிலும், மற்றவை 78 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது.

தமிழகத்தில், சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார்.