Published:Updated:

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை!

Vikatan Correspondent
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை!
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை!
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை!

சென்னை: புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருமுன்னிலை உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 1,53,201 வாக்குகள் பெற்றுள்ளார். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 1,44,661 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கம் 81,854 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் நாஜிம் 33.049 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் அனந்தராமன் 13,219 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளான 4,59,648 வாக்குகளில், 13,150 வாக்குகள் நொட்டோவுக்கும், 36 வாக்குகள் செல்லாதவைகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.