Published:Updated:

பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி: 21 ல் மோடி பிரதமராக பதவியேற்பு!

Vikatan Correspondent
பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி: 21 ல் மோடி பிரதமராக பதவியேற்பு!
பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி: 21 ல் மோடி பிரதமராக பதவியேற்பு!

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றிப்பெற்றுள்ள நிலையில், வருகிற 21 ஆம் தேதியன்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி: 21 ல் மோடி பிரதமராக பதவியேற்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கூட்டணி வெறும் 55 இடங்களில் மட்டுமே முன்னிலை மற்றும் வெற்றி நிலையில் உள்ளது.

மாலை நிலவரப்படி பாஜக கூட்டணி 339 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது.

அதிமுக 3 வது இடம்

இந்த தேர்தலில் தமிழகத்தில் 39 இடங்களை கைப்பற்றிய அதிமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

வெற்றி கொண்டாட்டம்

பா.ஜனதா கட்சி வரலாற்றிலேயே நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்தே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் அளவுக்கான இடங்களை பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.  இதனால் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. மேலும் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் . தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

'வெற்றி தேடித்தந்த மோடி அலை'

தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக பா.ஜனதாவினர் கூறிவந்தாலும், எதிர்க்கட்சியினர் அதனை ஏற்கவில்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறினர். இந்நிலையில் தனித்தே ஆட்சியமைக்கக் கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதாவினரே எதிர்பார்க்காத நிலையில், அக்கட்சி மட்டுமே அறுதிப்பெரும்பான்மைக்கு தேவையான 273 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றிவிடும் நிலையில் உள்ளது. 

பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி: 21 ல் மோடி பிரதமராக பதவியேற்பு!

இது குறித்து பேசும் டெல்லி தலைவர்கள், தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் மோடி மேற்கொண்ட சூறாவளி பிரசாரமும், அவருக்கு ஆதரவாக வீசிய அலையும்தான் காரணம் என்று கூறுகின்றனர்.

டீ விற்றவராக உருக்கம்

தனது தேர்தல் பிரசாரத்தின்போது தாம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்றும், சிறுவயதில் தேனீர் விற்றவர் என்றும், தாம் டீ விற்றதை காங்கிரஸார் கேலியாக பேசுவதாகவும், தேனீர் விற்பர் இந்த நாட்டின் பிரதமராக கூடாதா? என்றெல்லாம் உருக்கம் காட்டி, தனது தாயார் அண்டை வீடுகளில் வீட்டு வேலை செய்தவர் என்றும், தாம் முதலமைச்சராக இருந்தபோதும் ஓட்டுப்போட ஆட்டோவில் சென்றுவந்தார் என்றும் கூறி, தாம் ஒரு ஏழைப் பங்காளன் என்பது போன்ற இமேஜையும் ஏற்படுத்தினார். மோடியின் இந்த சென்டிமென்ட் பேச்சும் வாக்காளர்களிடம் வேலையை காட்டியுள்ளது என்பதைத்தான் பா.ஜனதாவின் வெற்றி உணர்த்துகிறது.

இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி: மோடி

தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த மோடி, இந்த வெற்றி இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறினார்.

இந்தியாவுக்கு இனி வளர்ச்சிதான்: மோடி தாயார்

பா.ஜனதா கூட்டணி மகத்தான வெற்றி: 21 ல் மோடி பிரதமராக பதவியேற்பு!

தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதலில் தனது தாயாரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார் மோடி. அதனைத் தொடர்ந்து  மோடியின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அவரது தாயார் ஹிராபென், "மோடிக்கு எனது ஆசீர்வாதங்கள். மோடி நாட்டை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வார்"  என்று கூறினார்.

தனித்தே ஆட்சியமைக்க வாய்ப்பு

மாலை 5.30 மணி நிலவரப்படி  மொத்தமுள்ள 543 இடங்களில் பா.ஜனதா கூட்டணி 336 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளது.  இதில் பா.ஜனதா மட்டுமே 246 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 35 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகள் 40 தொகுதிகளில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சியமைக்க 273 இடங்களை போதுமானது என்பதால் பா.ஜனதா தனித்தே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.  இருப்பினும் மத்தியில் ஸ்திரமான ஆட்சி மற்றும் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைத்துவிட்டு, வெற்றிபெற்றதும் அவர்களை அமைச்சரவையில் சேர்க்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதாலும் கூட்டணி கட்சிகளுக்கு மோடி அமைச்சரவையில் இடம் கொடுப்பார் என்றே தெரிகிறது.

இதுகுறித்து தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் வானதி சீனிவாசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில். வெற்றிபெற்ற பின்னர் கூட்டணி கட்சிகளை கழற்றிவிடும் குணம் பா.ஜனதாவுக்கு கிடையாது என்று கூறினார்.

உலக தலைவர்கள் வாழ்த்து

தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று இந்தியாவின் புதிய பிரதமராக உள்ள மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

இதேப்போன்று இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்துள்ள செய்தியில், வருங்காலத்தில் இந்தியாவும், இலங்கையும் இன்னும் நெருக்கமாக பணியாற்றி, இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி20 நாடுகள் மாநாட்டில் மோடியை சந்திக்க ஆவலுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் டேவிட், இந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் வழியில் பிரிட்டன் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேப்போன்று ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயும் மோடியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

'மே 21ல் பதவியேற்பு'

தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜனதா தலைவர்கள் நாளை டெல்லியில் கூடி ஆலோசிக்க உள்ளனர்.

இதில் கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே வருகிற 21 ஆம் தேதியன்று மோடி தலைமையிலான பா.ஜனதா அமைச்சரவை பதவியேற்றுக்கொள்ளும் என்றும், அன்றைய தினம் நாட்டின் புதிய பிரதமராக மோடி பதவியேற்றுக்கொள்வார் என்றும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.