Published:Updated:

விருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்!

Vikatan Correspondent
விருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்!
விருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்!
விருதுநகரில் வைகோ தோல்வி: திமுகவை பின்னுக்கு தள்ளினார்!

விருதுநகர்:  விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தோல்வியை தழுவினார். ஆனால், திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு 2வது இடத்தை பிடித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 4,06,694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2,61,143 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆனாலும், திமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

திமுக வேட்பாளர் ரத்தினவேல் 2,41,505 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 38,482 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாமுவேல்ராஜ் 20,157 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 12,225 வாக்குகள் கிடைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே வைகோ பின்னடைவை சந்தித்தார். தொடர்ந்து பின்னடவை சந்தித்து வரும் வைகோ தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 10,500

முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 26,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேல் 13,500 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.

2வது சுற்று வாக்கு எண்ணிக்கை

2வது சுற்றில் அதிமுக வேட்பாளர் 19,867 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்குகள் 47,228

தி.மு.க. வேட்பாளர் 27,361 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார்.

வைகோ 24,198 வாக்குகள் பெற்று தொடர்ந்து 3வது இடத்தில் இருக்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் 6340 வாக்குகள் பெற்றுள்ளார்.

3வது சுற்று


அதிமுக 70,347
திமுக 40,380
வைகோ 38,807
காங்கிரஸ் 6,672

4வது சுற்று

அதிமுக 91,189
வைகோ 53801
திமுக 53775
காங்கிரஸ் 6081

5வது சுற்று

அதிமுக 1,07359
வைகோ 70,044
திமுக 68913
காங்கிரஸ் 11,263

6 வது சுற்று

அதிமுக 1,30.115
வைகோ 84,971
திமுக 81,304
காங்கிரஸ் 13,130 

7 வது சுற்று

அதிமுக 1,54,179
வைகோ 1,00,744
திமுக 93,267
காங்கிரஸ் 13,130