Published:Updated:

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. முன்னணி!

Vikatan Correspondent
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. முன்னணி!
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. முன்னணி!
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. முன்னணி!

சென்னை: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த மாதம் 24ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளிடையே போட்டிகள் நிலவின. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் அ.தி.மு.க. 3,376 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. தி.மு.க. 2,984 வாக்குகளும், தே.மு.தி.க. 1060 வாக்குகளும் பெற்றுள்ளன.

இந்த சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தே.மு.தி.க. 3 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.